கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சி வருபவர், கவிப்பேரரசு எனக் கொண்டாடப்படுபவர் வைரமுத்து. பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், கண்ணதாசன், வாலி உள்ளிட்ட படலாசிரியர்களின் வரிசையில் தமிழ் சினிமாவில் இடம்பிடித்த  வைரமுத்து இன்று தன்னுடைய 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


 


Kamal Wishes Vairamuthu: என் மனதிற்கினிய நண்பர்.. வைரமுத்து பிறந்தநாளில் கமல்ஹாசன் வாழ்த்து!


தன்னுடைய வரிகளால் ஜாலம் செய்யும் வைரமுத்துவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


 






"இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்" எனப் பதிவிட்ட்டுள்ளார் கமல்ஹாசன்