இனிமேல் நடிக்கமாட்டேன் என்று கூறிய உதயநிதி


 




பல படங்களை  தயாரித்து, சிறப்பு தோற்றத்தில் படத்தில் காட்சியளித்த உதயநிதி ஸ்டாலின்,ஓகே  ஓகே படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், தொடர்ந்து காமெடி கலந்த ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்திற்கு பிறகு, சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படங்களில் நடித்தார். 


கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக நின்று வெற்றி பெற்றார். தற்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிமேல் படங்களில் நடிக்க போவது இல்லை என கூறியுள்ளார். இதனால் கமலின் தயாரிப்பில் இவர் நடிக்கபோகவிருந்த படம் கைவிடப்பட்டது. மாமன்னன் படமே இவர் நடித்த கடைசி படமாக அமையும் என்பது குறிப்பிடதக்கது.


ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்த விஜய் 


நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, தன்னை சந்திக்க வந்த ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் அலேக்காக தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.


அடுத்தடுத்து நடந்து வரும் கூட்டங்களில் பல அறிவுறுத்தல்களை கூறி வரும் விஜய், பொங்கலுக்கு ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் ஏற்படும் சச்சரவுகளை தவிர்க்க வேண்டும் என இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.






கட்-அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதையும், வருங்கால முதலமைச்சரே என போஸ்டர்கள் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 



ஸ்லிம் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி






மிகவும் பிஸியாக இருந்து வரும் விஜய் சேதுபதி தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பார்த்து மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளார்கள் அவரின் ரசிகர்கள். விஜய் சேதுபதி தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்போது ஸ்லிம் லுக்கில் இருக்கிறார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற போஸ்ட் அது. விஜய் சேதுபதியின், அடுத்த திரைப்படத்திற்காக இந்த லுக் என்பது ரசிகர்களின் யூகம்.  


சில்லா சில்லாவிற்கு பிறகு வரப்போகும் காசேதான் கடவுளடா






சில நாட்களுக்கு முன்னர், ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்தது போலவே, சில்லா சில்லா பாடலையும் குறித்த நாளுக்குள் கொடுத்து அனைவரையும் உற்சாகப்படுத்தினர், துணிவு படக்குழுவினர். நேற்று, துணிவு படத்திற்கான அடுத்த பாடலின் பெயரை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். காசேதான் கடவுளடா என்று பதிவிட்ட அவரது ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா


ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கோவிட்-19 பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  ஆதலால் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கவிருக்கும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் பிரீமியரில் கலந்து கொள்ளவில்லை.






உலகம் முழுவதும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16ம் வெளியாகவுள்ளது. மனதை கவரும் இப்படத்தின் ரிலீஸுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.