Just In





விடாமுயற்சி படத்தால் திணறிய தனுஷ்...உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ஐடியா
விடாமுயற்சி படத்தின் ரிலீஸால் நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் முன்பே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது

விடாமுயற்சி
அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியக இருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் ஏற்கனவே நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருந்து பின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் தினத்தில் வெளியாக இருந்த காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா ஆகிய இரு படங்கள் முன்னதாகவே வெளியாகின. தற்போது பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தனுஷுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ஐடியா
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் ஜனவரி மாதமே வெளியிட இருப்பதாக முன்பு தகவல் வெளியாகின. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பார்த்துவிட்டதாகவும் பிப்ரவரி 21 ஆம் தேதி படத்தை வெளியிட்டால் படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்கும் என ஆலோசனை கூறியுள்ளதாகவும் அதன்படி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் அடுத்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
டீன் ஏஜ் வயதினரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். பவிஷ் ,அனிகா சுரேந்திரன் , பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் , வெங்கடேஷ் மேனன் , ரபியா கட்டூன் , ரம்யா ரங்கநாதன், அன்பு தாசன் , சதீஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தவிர்த்து தனுஷ் இட்லி கதை படத்தில் நடித்தும் இயக்கியுமிருக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.