மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டிலை உதயநிதி ஸ்டாலின் நேற்று. இதுகுறித்து அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் பெயர் மாமன்னன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்குவதாகவும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.






அதனை அடுத்து, `ராதே ஷ்யாம்’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அதன் ப்ரொமோஷன்களுக்காக அந்த குழு நேற்று சென்னை வந்திருந்தது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது.



நடிகர் பிரபாஸ், விக்ரமாதித்யா என்ற கதாபாத்திரத்திலும், நடிகை பூஜா ஹெக்டே, ப்ரேரனா என்ற கதாபாத்திரத்திலும் ஜோடியாக நடித்துள்ளனர். வரும் மார்ச் 11 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள `ராதே ஷ்யாம்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சீன மொழி, ஜப்பானிய மொழி ஆகிய மொழிகளின் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 






ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் நடிக்கும் மாமன்னன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று. ஆனால், முதல் நாளே படப்பிடிப்பிற்கு செல்லாமல் இங்கு வந்துவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படம் எனக்கு முக்கியமானது. மார்ச் 11-ம் தேதி இப்படத்தை 175 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்திருக்கிறார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண