நாளை வெந்து தணிந்தது காடு ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தைப் பார்த்த உதயநிதி பாசிட்டிவான ரிவியூவை கொடுத்துள்ளார். 


இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு(Vendhu Thanindhathu Kaadu). இத்திரைப்படம் சிம்புவின் 47 வது திரைப்படம் ஆகும். முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.





ஏ.ஆர்.ரஹ்மானே வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.


மாநாடு படத்தை முடித்து கொடுத்த கையோடு சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். இது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் நாளை புதிய படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.






வெந்து தணிந்தது காடு போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வந்தது. இதில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளார். முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் எந்த காலத்திற்கும் ஃபிரஷ் ஃபீலை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது வெளியாக உள்ள 'வெந்து தணிந்தது காடு ‘படம் STR , GVM கூட்டணியின் மூன்றாவது படம். இந்நிலையின் படம் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் முதல் ஆளாக படத்துக்கு ரிவியூ கொடுத்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி,'' கெளதம் மேனன் மற்றும் சிலம்பரசன் காம்போவில் பெரிய படமாக வந்துள்ளது. வெந்து தணிந்தது காடு இந்த வருடத்தின் சிறந்த படங்களின் லிஸ்டில் இடம்பெறும். முத்துவாக சிம்பு கலக்கியுள்ளார். ஒவ்வொரு பிரேமிலும் கெளதம் மேனனின் ஸ்டைலிஷ் வொர்க் தெரிகிறது. ரஹ்மானின் பாடல்களும் அருமை எனக் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் பாசிட்டிவான ரிவியூவை அடுத்து வெந்து தணிந்தது காடு படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.