விக்ரம் திரைப்படம் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை உடைக்கும் என படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், “ உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. நான் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பில் கமலை சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். விக்ரம் திரைப்படம் அவரது சினிமா வாழ்வில் மிக முக்கியமான படம் இருக்கும். நிச்சயம் விக்ரம் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை உடைக்கும்” என்றுபதிவிட்டு இருக்கிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் வரும் இன்று வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.