Udayanidhi Stalin: "ஹிந்தி கத்துக்கிட்டுதான் ஆகணும் என்று திணிக்கக்கூடாது" - உதயநிதி கூறிய பளீச் பதில்  


பாலிவுட் சூப்பர் ஹீரோ கான் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் லால் சிங் சத்தா. ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகர் டாம் ஹாங்ஸ் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் எனும் புகழ்பெற்ற திரைப்படம் பல விருதுகளை குவித்தது. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் திரைப்படம் தான் லால் சிங் சத்தா. இப்படம் ஹிந்தியில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. படத்தின் தமிழ் ட்ரைலர் ஜூலை 25-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தன்னை தொடர்ந்து  ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


பாலிவுட்டில் நுழையும் தெலுங்கு ஹீரோ  :


அமீர் கான் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா முதன்முறையாக இந்த திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார். அமீர் கான் மற்றும் நாக சைதன்யா ராணுவ வீர்களாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பு :


தமிழில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட உள்ளது. தற்போது இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி திரைப்படமான லால் சிங் சத்தா தான் முதன் முறையாக தமிழில் வெளியிடுவது சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஹிந்திக்கு எதிராக "ஹிந்தி தெரியாது போடா" குரல் கொடுக்கும் மற்றும் ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழகத்தின் தி.மூ.க கட்சியில் இருந்து கொண்டு எப்படி இந்த ஹிந்தி திரைப்படத்தை வெளியிட சம்மதித்தீர்கள் என பல கேள்விகள் அடுக்கப்பட்டது. 






பளிச் பளிச் பதில் :


தமிழில் வெளியிடுவது குறித்த கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதை பற்றி அவர் கூறுகையில்   இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் " ஹிந்தி தெரியாது போடா" என்று கூறியதற்கான அர்த்தம் ஹிந்தி திணிக்கப்பட்ட கூடாது என்பதற்காகத்தான். ஆனால் ஹிந்தி மொழியையே கற்றுக்கொள்ளக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. விருப்பப்படுபவர்கள் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று திணிப்பதுதான் எதிர்க்கப்பட்டது. அதுதான் திமுகவின் கொள்கை என்று மிகவும் தெளிவான பதிலை அளித்துள்ளார். மேலும் மொழியை காட்டிலும் அவர் அமீர்கானின் மிக பெரிய ரசிகர் அதனால் இப்படத்தினை வெளியிடுகிறோம் என்றார் உதயநிதி.