ஆயுத பூஜையை முன்னிட்டு அமேசான் தளத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடிப்பில் ’உடன்பிறப்பே’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இது ஜோதிகாவின் 50வது திரைப்படம்.அண்ணன் தங்கை உறவை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. திரைப்படம் வெளியாவதை அடுத்து ஜோதிகா ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். அதில், அட்வைஸ் செய்யும் கதாப்பாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும் பெண்களை சினிமா சரியாகக் காட்சிப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement











அவரது பேட்டியில், ‘படங்களைத் தேர்வு செய்யும்போது என் முதல் கவனம் எனது பிள்ளைகள் குறித்துதான் இருக்கும்.அதனால் எப்போதும் அட்வைஸ் செய்யும் கதாப்பாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. பிள்ளைகளுக்கு நாம் அட்வைஸ் செய்பவர்களாகவே தெரிவோம். எனக்கு எல்லாக் கதாப்பாத்திரங்களிலும் நடிக்க விருப்பம். குறிப்பாக பெண்களை சரியாக காட்சிப்படுத்தும் படமாகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். இங்கே பல படங்கள் பெண்களைச் சரியாகக் கட்சிப்படுத்துவதில்லை.ஆனால் ஆண்கள் மட்டும் கண்ணியமானவர்களாக எல்லாவற்றிலும் ஜெயிக்கும் கதாப்பாத்திரங்களாகவும் ஹீரோக்களாகவும் காட்டப்படுகிறார்கள்’ என ஆதங்கப்பட்டுள்ளார்.  
முன்னதாக