Actor Nassar: நடிகர் நாசருக்கு கோல்டன் விசா அளித்து அமீரகம் கௌரவம் !

நடிகர் நாசருக்கு கோல்டன் வீசா வழங்கி அமீரக அரசு கௌரவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola