இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற நடிகர் க்ளெண்டா ஜாக்ஸன் (Glenda Jackson)  காலமானார்.


1960 முதல் 1970 வரையிலான காலங்களில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தவர் க்ளெண்டா ஜாக்ஸன். இங்கிலாந்தில் பர்கின்ஹெட் 1936இல் பிறந்தவர் க்ளெண்டா ஜாக்ஸன். லண்டனில் இருக்கும்  ராயல் அகாடமி ஆஃப் ட்ராமேட்டில் ஆர்ட் (royal academy of dramatic art) இல் நடிப்புப் பயிற்சிப் பெற்றுள்ளார். வுமன் இன் லவ் ( women in love)  மற்றும் எ டச் ஆஃப் க்ளாஸ் ( a touch of class)  ஆகியத் திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.


நடிப்பைத் தொடர்ந்து அரசியலிலும் குறிப்பிட்ட காலம் இருந்துள்ளார் க்ளெண்டா. 1992இல் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். சுமார் 23 ஆண்டுகள் தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின் 1997ஆம் ஆண்டு டோனி ப்ளையரின் (tony blair) ஆட்சியின் கீழ் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.


ஈராக் போரில் ப்ளையருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணத்தினால் 2015ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகினார் க்ளெனடா. இது குறித்து கேட்டபோது எந்தப் போரிலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் குழந்தைகள் தான் எனக் கூறினார்.


மீண்டும் நடிப்பிற்குத் திரும்பிய க்ளெண்டாவிற்கு தனது கரியரில் மிகச் சிறப்பான கதாபாத்திரங்களில் சிலவற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான கிங் லீயர் (king lear)  நாடகத்தில்  பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார்.


கால் நூற்றாண்டுகள் கழித்து நடிப்பிற்குத் திரும்பிய க்ளெண்டா, எலிசபெத் இஸ் மிஸ்ஸிங் ( Elizabeth is missing)  என்கிறப் படத்தில் நடித்தார்.  நியாபக மறதி உள்ள ஒரு பெண், ஒரு மர்மமான வழக்கை ஆராயும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக பாஃப்டா விருதை வென்றார் க்ளெண்டா.  அமெரிக்காவில் ஆஸ்கர் விருதிற்கு நிகரானது பிரிட்டனின் பாஃப்டா விருது.


87 வயதான க்ளேண்டா கடந்த ஜூன் 15 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனது வீட்டில் காலமானார் என்கிறத் தகவலை அவரது ஏஜெண்ட் லியோனல் லார்னர் (lionel larner) பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார். க்ளெண்டா தற்போது  தி கிரேட் எஸ்கேபர் (the great escaper)  என்கிற திரைப்படத்தின் மைக்கல் கேய்னுடன் இணைந்து நடித்துள்ளப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


க்ளெண்டா நடித்தப் படங்கள்


women in love. A touch of class, Elizabeth is missing, Elizabeth r , Sunday bloody Sunday, the music lovers ஆகியவை அவர் நடித்தத் திரைப்படங்கள்.