நடிகர்கள் சிவகார்த்திகேயன், வினய் , யோகி பாபு நடித்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படம் வருகின்ற 9 அக்டோபர் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டாக்டர் ட்டெய்லரின் வரவேற்பானது பீஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அமைதிகாத்திருந்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட்டை தருமாறு கேட்கத் தொடங்கியுள்ளனர். 

Continues below advertisement


 






இந்நிலையில் இன்று டாக்டர் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் குறித்து பதிவிடத் தொடங்கியுள்ளனர். #அப்டேட்_குடுங்க_நெல்சன் என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  இதற்கிடையே  பீஸ்ட் படம் தொடர்பான அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் பேசியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசிய அனிருத்திடம் பீஸ்ட் படம் தொடர்பாக அப்டேட்டை குறிப்பிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அது குறித்து பேசிய அனிருத், '' பீஸ்ட் அப்டேட் வரும்.. படக்குழு கொஞ்சம் நேரமெடுத்து அப்டேட்டை அறிவிப்பார்கள்'' எனத் தெரிவித்தார். 


பீஸ்ட் படத்தில் நடிகர்கள் விடிவி கணேஷ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோம், லிலிபுட் ஃபரூக்கி,  அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ச் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளன்று  வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.