தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் விஜய். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் அவரது ரசிகைககள் பல கேள்விகளை கேட்டனர். 

Continues below advertisement

அப்போது, அவரிடம் ஒரு ரசிகை ஒரு நடிகரான பிறகு உங்கள் தனிப்பட்ட வாழ்வை அது பாதித்ததா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்த நடிகர் விஜய், 

ரஜினி படம் பார்ப்பதை மிஸ் செய்கிறேன்:

அதை நான் தொல்லை என்று சொல்லமாட்டேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நான் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் செல்வேன். தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது. முதல் நாள் முதல் காட்சி ரஜினி சார் படம் பார்ப்பது, அந்த கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பதை எல்லாம் நான் மிஸ் செய்கிறேன். 

Continues below advertisement

பொதுமக்களுடன் செல்வது, சமுதாயத்தில் கலந்து இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். அது மட்டும்தான் நான் கொஞ்சம் மிஸ் செய்கிறேன். ஆனால், அதை நான் தொல்லை என்று சொல்ல மாட்டேன். நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியான ஒரு தொல்லை என்று சொல்லலாம். 

இவ்வாறு அவர் கூறினார். 

ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல்:

நடிகர்  விஜய் சுமார் 12, 13 வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி இதுவாகும். நடிகர் விஜய் தன்னுடைய ஆரம்ப கால படங்களில் நடிகர் ரஜினியின் ரசிகனாகவே தன்னை பல இடங்களில் அடையாளப்படுத்திக் கொண்டார். பின்னாளில் ரஜினிகாந்திற்கு நிகராக தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உயர்ந்தார்.

இதன்பின்னர், சூப்பர்ஸ்டார் பட்டம் தொடர்பான மோதலில் இணையத்தில் ரஜினி ரசிகர்கள் - விஜய் ரசிகர்கள் இடையே நடந்த மோதல் மிகப்பெரிய அதிர்வலையை இணையத்தில் உருவாக்கியது. தற்போது வரை ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல் நடந்து வருகிறது. 

தேர்தலில் ஆதரவு கிட்டுமா?

மேலும், ரசிகர்கள் மோதலைத் தவிர்ப்பதற்காக விஜய் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று விளக்கம் அளித்தார். ஆனாலும், தொடர்ந்து தற்போது வரை ரசிகர்கள் மோதல் இணையத்தில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு அனைத்து பிரபல நடிகர்களின் வாக்குகளும் அவசியமாகிறது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும். 

இதனால், அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர்வதற்காக விஜய் நண்பர் அஜித் என்று அஜித்தின் பெயரை சில இடங்களில் பயன்படுத்தி வருகிறார். மற்ற பிரபலங்களின் வாக்குகள் விஜய்க்கு கிடைக்குமா? என்பதை வரும் தேர்தலே முடிவு செய்யும்.