தமிழக மக்களின் தங்களின் வெளியூர் பயணங்களுக்கு ரயில்களையே பெரிதும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டான வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரயில்களின் நேரத்தை மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில் வரும் 1ம் தேதி முதல் எந்தெந்த ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. எழும்பூர் - திருநெல்வேலி ( வந்தே பாரத்)
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படுகிறது. இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது.
ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ரயில் மதியம் 3.05 மணிக்கு புறப்படும். திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்குச் சென்றடையும்.
2. தாம்பரம் - கொல்லம்:
தாம்பரத்தில் இருந்து கொல்லம் செல்லும் ரயில் தற்போது மாலை 5.27 மணிக்கு புறப்படுகிறது. கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 7.10 மணிக்குச் செல்கிறது.
புத்தாண்டு முதல் மாலை 5.15 மணிக்கே இந்த ரயில் புறப்பட்டு விடும். இதனால், 10 நிமிடங்களுக்கு முன்னதாக கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 7 மணிக்கேச் சென்றுவிடும்.
3. எழும்பூர் - மதுரை ( வைகை):
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்குச் சென்று கொண்டிருக்கிறது.
ஜனவரி 1ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் அரை மணி முன்கூட்டியே புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கே புறப்படுகிறது. இங்கு அரை மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டாலும் மதுரைக்கு இரவு 9.10 மணிக்கு செல்கிறது.
4. எழும்பூர் - திருநெல்வேலி (நெல்லை விரைவு ரயில்):
எழும்பூரில் இருந்து இந்த ரயில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 6.40 மணிக்கு சென்றடைகிறது. புத்தாண்டு முதல் இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்குச் சென்றடையும்.
5. எழும்பூர் - தூத்துக்குடி (முத்துநகர் விரைவு ரயில்):
சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் மாலை 7.30 மணிக்கு புறப்பட்டு வந்தது. அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடைந்தது.
புத்தாண்டு முதல் இந்த ரயில் மாலை 7.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். தூத்துக்குடிக்கு காலை 5.55 மணிக்குச் சென்றடையும்.
6. எழும்பூர் - செங்கோட்டை ( பொதிகை விரைவு ரயில்):
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் இந்த ரயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு வருகிறது. செங்கோட்டைக்கு காலை 7.25 மணிக்கு சென்றடைந்தது.
இனிமேல் இந்த ரயில் மாலை 7.35 மணிக்கே எழும்பூரில் இருந்து புறப்படும். இதனால், செங்கோட்டைக்கு காலை 6.40 மணிக்கு சென்றடையும்.
7. எழும்பூர் - ராமேஸ்வரம் ( சேது விரைவு ரயில்):
எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரயில் இதுவரை மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு வந்தது. இந்த ரயில் அடுத்த நாள் காலை 4 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்து வந்தது.
இனிமேல் இந்த ரயில் ஜனவரி 1ம் தேதி முதல் மாலை 5.55 மணிக்கு புறப்படும். ஆனாலும், ராமேஸ்வரத்திற்கு அதே 4 மணிக்குச் சென்றடையும்.
இந்த நேர மாற்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. மேலே கூறிய 7 ரயில்களில் திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் மற்றும் ராமேஸ்வரம் சேது விரைவு ரயில் தவிர மற்ற ரயில்கள் முன்கூட்டியே புறப்படுகிறது.