தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முறை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவரிடம் நடிகை அனு சில கேள்விகள் கேட்பார். அதற்கு நடிகர் விஜய் அளித்த பதில் என்ன என்பதை கீழே காணலாம்.
கேள்வி : விஜய் நல்ல நடிகரா? பாடகரா? டான்சரா?
பதில் : கண்டிப்பா நடிகர் கிடையாது. டான்சர்னு நினைக்கிறேன்.
கேள்வி : தமிழ் சினிமாவில் நீங்கள் போற்றும் 3 பேர் யார்?
பதில் : இளையராஜா, மணிரத்னம், எஸ்பி பாலசுப்ரமணியம்
கேள்வி: நீங்க அப்பா மாதிரியா? அம்மா மாதிரியா?
பதில் : இரண்டு பேர் மாதிரியும்தான்.
கேள்வி : திரையில் பார்க்க எந்த ஜோடி அழகா இருப்பாங்க? விஜய் - த்ரிஷா, விஜய் - ஜோதிகா, விஜய் - அசின்
பதில்: நிறைய பேர் சொல்லி கேட்ருக்கேன். விஜய் - த்ரிஷா
கேள்வி: அஜித்கிட்ட பிடிச்ச ஒரு விஷயம்?
பதில்: தன்னம்பிக்கை
கேள்வி: யானா குப்தா, பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத்- மூணு பேரில் யாரு ஹாட்டர்?
பதில்: மூணு பேரும்
கேள்வி: உங்க ஒயிஃப்கிட்ட நீங்க அடிக்கடி திட்டு வாங்குற விஷயம்?
பதில்: அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டேதான் இருப்பா
கேள்வி: உங்களுக்கு நீங்க 1 முதல் 5 மதிப்பெண் வரை கொடுக்கச் சொன்னால் என்ன மதிப்பெண் கொடுப்பீங்க?
பதில்: ஜஸ்ட் பாஸ். 3 கொடுக்கலாம்
கேள்வி: விஜய்யோட வெற்றிக்கு காரணம ரசிகர்களா? உழைப்பா?
பதில்: உழைப்பினால்தான் ரசிகர்கள்
கேள்வி: நீங்க அரசியலுக்கு வருவீங்களா?
பதில்: யாருக்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது முதலே அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்து வந்தது. தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அவர் தீவிரமாக தற்போது களத்தில் இறங்கி கட்சிப்பணிகளை செய்து வருகிறார்.