காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா
இசைஞானி என தமிழர்கள் கொண்டாடும் மாபெரும் ஆளுமை இளையராஜா. சமீப காலங்களில் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் இளையராஜா. குறிப்பாக தனது பாடல்களுக்கான காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் தான் இசையமைத்த பாடல்களுக்கு இளையராஜா 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அவரை பணத்தாசை பிடித்தவர் என பலர் விமர்சித்தார்கள். ஒருபக்கம் விமர்சனங்கள் இருந்தாலும் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா தரப்பு நியாயத்தையும் பலர் எடுத்து கூறி வருகிறார்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய கலைஞர்களுக்கும் சேர்த்தே இளையராஜா இந்த சட்ட போராட்டத்தை நடத்தி வருவதாக பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் ஏமாற்றமளிக்கும் விதமாக இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்
மோடியை புகழந்த இளையராஜா
தான் உருவாக்கியுள்ள சிம்பனி குறித்து இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார் ' மெளண்ட்பேட்டன் தொடங்கி இந்தியாவை ஆண்ட எல்லா பிரதமர்களையும் எடுத்துபாருங்கள். அவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். இன்னொரு பக்கம் பிரதமர் மோடி இந்தியாவுக்கு என்ன செய்திருக்கிறார் என்று ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும். 1988 இல் நான் காசிக்கு சென்றபோது அது சிறுநீர் கழிக்கும் இடமாக இருந்தது. இப்போது அது முழுமையாக மாறியுள்ளது. கங்கையில் புனிதமான நீர் ஓடுகிறது. ஆனால் மக்கள் அதை முட்டள்தனமாக அசுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். மோடிதான் சரியான திட்டங்களைக் கொண்டு வந்து அதை சரி செய்தார். நாட்டை விரும்பும் ஒருவரால் தான் இதை செய்ய முடியும். சரி மோடி உங்களுக்கு வேண்டாம் என்றால் எல்லா மக்களும் ஏற்கும் இன்னொரு தலைவரை எனக்கு காட்டுங்கள். அப்படி ஒருவர் இல்லவே இல்லை. இது என்னுடைய பனிவான கருத்து. " என இளையராஜா பேசியுள்ளார்
இளையராஜாவின் கருத்து அவரது ரசிகரகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நாம் இங்கு இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவரை பாருங்கள் மோடிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார் என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகிறார்கள். மறுபக்கம் பாஜக ஆதரவாளர்கள் இளையராஜாவின் கருத்தை வரவேற்று வருகிறார்கள்.