மதுரை விமான நிலையத்தில் விஜய்
ஒருபக்கம் ஜன நாயகன் பட படப்பிடிப்பு இன்னொரு பக்கம் கட்சிப் பணிகள் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். சமீபத்தில் ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக மதுரை வழியாக கொடைக்கானல் சென்றார் விஜய். படப்பிடிப்பு முடிந்து விஜய் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரசிகர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்
நடிகர் விஜய் ஜன நாயகன் பட படப்பிடிப்பு முடிந்த கொடைக்கானலில் இருந்து திரும்பினார். அப்போது மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை போர்த்த வந்த இன்பராஜ் என்கிற ரசிகர் அவரை நெருங்கினார். உடனே விஜயின் பாதுகாவலர் அந்த ரசிகரின் தலையில் துப்பாக்கியை எடுத்து வைத்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது
"பாதுகாவலர் துப்பாக்கி வைத்தது கூட ஆச்சரியமல்ல.. அதன் பிறகு விஜய் அவரைக் கண்டு கொள்ளாமல் சென்றது ஆச்சரியம் அளிக்கிறது. விஜய் இன்னும் மக்களிடம் நெருங்க பயப்படுகிறார்.. மக்களிடமிருந்தும் தொண்டர்களிடமிருந்தும் அன்னியமாகவே இருக்கிறார்.. தன் உயரத்திலிருந்து இறங்கி வர வேண்டும் மக்களால் தான் இந்த உயரத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்." இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமுக வலைதளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள்
தவெக மீது தொடர் விமர்சனம்
தவெக தலைவர் விஜய கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதி கோவையில் பூம் கமிட்டி மாநட்டை நடத்தினார், அப்போது மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பு தனது வாகனத்தில் விஜய் பேரணி சென்ற போது தவெக தொண்டர் ஒருவர் மரத்தில் இருந்து குதித்து வேன் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது, இது மட்டுமில்லாமல் விஜயை காண ஆர்வம் காட்டி வந்த சில பேர் விபத்தில் சிக்கிய சம்பவங்களும் அரங்கேறின, தவெக தொண்டர்கள் செயல் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர் மீது துப்பாக்கி வைத்துள்ள நிகழ்வு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது.