15 மாத குழந்தையை தரையில் அடித்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை சந்திரிகா சாஹாவின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த சந்திரிகா சாஹா
அதாலத், சிஐடி மற்றும் சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட் போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சந்திரிகா சாஹா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழில் அதிபரான அமன் மிஸ்ராவை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்தனர். தொடர்ந்து லிவிங் டுகெதர் உறவில் இருந்த சந்திரிகா கர்ப்பமானார். இதனையறிந்த அமன், சந்திரிகாவை கருக்கலைப்பு செய்ய வலியுறுத்த இருவருக்குள்ளும் பிரச்சினை எழுந்தது. அதேசமயம் சந்திரிகாவை பரிசோதித்த டாக்டர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து இந்த குழந்தைக்கு 14 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த மாதம் 41 வயதான சந்திரிகாவும், 21 வயதான அமனும் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சண்டை எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சந்திரிகா சாஹா தனது கணவர் அமன் மிஸ்ரா மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
கணவர் மீது புகார்
அதன்படி தங்களது 15 மாத குழந்தையை அமன் 3 முறை தரையில் அடித்து காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையில் படுக்கையறையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்பித்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்த போது தான் சமையலறையில் இருந்ததாகவும் , மகன் அழும் சத்தம் கேட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். தான் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் அமனிடம் சொல்லிவிட்டு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை படுகாயத்துடன் கிடந்ததாகவும்- குறிப்பிட்டுள்ளார். மேலும் மலாடு மேற்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Custody Movie Review: "கஸ்டடி" ரசிகர்களை கட்டிப்போட்டதா..? கடுப்பேற்றியதா..? இதோ சுடச்சுட விமர்சனம்..!