நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் நேற்று மும்பை சென்றார் என்ற செய்தி வெளியானது. அதனைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 


 



மொய்தீன் பாய்:


மொய்தீன் பாய் ஆட்டம் என்ற தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ரஜினி ஒரு இஸ்லாமியர் தோற்றத்தில் தொப்பி அணிந்து இருப்பது போலவும் அவருக்கு பின்னணியில் கலவரம் வெடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. சாந்தியும், சமாதானமும் உண்டாகும் என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது.இந்த போஸ்டர் வெளியானதில் இருந்து பயங்கரமாக இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. 


அங்க இங்க என எல்லாரையும் ட்ரோல் செய்த நெட்டிசன்கள் சூப்பர் ஸ்டாரையும் விட்டுவைக்கவில்லை. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இந்த கதின்னா அப்போ டிரைலர் படத்தின் நிலைமை என்னவாக இருக்கும் என நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. மீம் கிரியேட்டர்களுக்கு எப்படி இப்படி எல்லாம் யோசனை வருது என்பது ஆச்சரியமாக உள்ளது. டெக்னலாஜி வளர்ந்துலும் வளர்ந்தது இதுக்கெல்லாம் கூட இப்படி பயன்படுத்துவங்களா. மொய்தீன் பாய்யை வைச்சு செஞ்சுட்டாங்க.  அவரை வைத்து கலாய்த்த ஒரு சில மீம்ஸ் இதோ:


ரஜினிக்கு அவரு முடிதானே ப்ளஸ் பாய்ண்டே..அதையே தொப்பி போட்டு மறச்சிட்டாங்களே! 


 



தொப்பி வாப்பா பிரியாணி கூட எல்லாம் ஒப்பிட்டு பார்த்து மீம் கிரியேட் பண்ணி வச்சு இருக்காங்க பா. 


அவரோட சீன எடுத்து வைச்சு அவரையே கலாய்க்கிறாங்க பாருங்க 


முரட்டு காளை படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் இஸ்லாமியர் வேஷம் போட்டு இருப்பார். லால் சலாம் மொய்தீன் பாய் அவரோட ஓல்ட் வர்ஷனா இருக்குமோ!


லால் சலாம் போஸ்ட்டரை பார்த்தால் சந்திரமுகி படத்தில் வர 'தொப்பி தொப்பி சீன் தான் ஞாபகம் வருகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள் இணையதள வாசிகள் 


 



ரஜினி ரசிகர் ஒருவர் லால் சலாம் மொய்தீன் பாய் போஸ்டர் ஒன்றை மாடர்னாக எடிட் செய்துள்ளார். இதற்கு பலரும் லைகா நிறுவனத்தின் போஸ்டரே இதற்கு எவ்வளவோ தேவல என ட்வீட் செய்துள்ளனர். அதே சமயம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்  நடிக்கும் ஜெயிலர் படத்தின் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் லால் சலாம் மற்றும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஒப்பிட்டு போஸ்டர்னா இப்படி இருக்கனும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


இப்படி மீம் கிரியேட்டர்கள் அட்ராசிட்டி தாங்க முடியல. மொய்தீன் பாய் போஸ்ட்டரை முதன்மையாக வைத்து படத்தை புரொமோஷன் செய்த நினைத்த லால் சலாம் படக்குழுவினருக்கு இந்த ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.