‛திரிஷா இல்லைன்னா திவ்யா’ என்கிற அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை திரிஷா. முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்த அவர், இன்றும் மார்க்கெட்டில் இருக்கிறார் என்பது தான் திரிஷாவின் பலம். ஆனாலும் முந்தைய காலங்களை போல திரிஷாவிற்கு படங்கள் இல்லை என்பதும் உண்மை. அது தொடர்பாக மனம் திறந்திருக்கிறார் திரிஷா.




‛தான் 19 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருவதாகவும், சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா போன்ற போட்டி நடிகைகள் இருந்ததால் தான், அவர்களுடன் போட்டி போட்டு முந்த வேண்டும் என்கிற எண்ணம் மனதிற்குள் இருந்ததாகவும், அதுவே இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பயணிக்க காரணமானது,’ என, தன் ரகசியத்தை உடைத்துள்ள திரிஷா, அன்று இருந்த உந்து சக்தி தற்போது இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.




தற்போது போட்டி நடிகைகள் யாரும் களத்தில் இல்லை என்றும், அதனால் முந்த வேண்டும் என்கிற உந்துதலும் இல்லாமல் போனதாக வேதனை தெரிவித்துள்ள திரிஷா, போட்டி இல்லாத களம் போர் அடிப்பதாகவும் கூறியுள்ளார்.