PS1 Trisha : வைரலாகும் த்ரிஷா புடவை.. இந்த பனாரஸ் புடவையின் சிறப்பு தெரியுமா? 

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு பட்டு பெனாரசி புடவையில் பிரமாதமாக காட்சியளித்தார்.

Continues below advertisement

காலம் கடந்தும்  தலைமுறை கடந்தும் இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கும் சரித்திர நாவலான கல்கியின் "பொன்னியின் செல்வன்" கதையை தழுவி திரைப்படமாகியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். அப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படம் உலகளவில் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. படக்குழுவினர் படத்தின் விளம்பர பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். 

Continues below advertisement

 

விளம்பர யுக்தி :

பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரத்தின் முதற்கட்டமாக நடிகர் விக்ரம் மற்றும் நடிகை திரிஷா அவர்களின் ட்விட்டர் கணக்குகளை படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களாக மாற்றியுள்ளனர். இந்த விளம்பர யுக்தி ராசிக்காரர்களை மிகவும் கவந்தது.  

 

 

கவனத்தை ஈர்த்த இளவரசி குந்தவையின் தோற்றம் : 

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு பட்டு பெனாரசி புடவையில் பிரமாதமாக காட்சியளித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் குந்தவை எனும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த புடவை ஒரு ராஜாங்கத்தின் இளவரசிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. புடவையின் முந்தியில் பரம்பரியமான மலர் உருவங்களின் வேலைப்பாடுகள் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு சேர்ந்து பாரம்பரிய நகைகள் மற்றும் காதணிகள் என அனைத்தும் மிகவும் பொருத்தமாக இருந்தது. அவரின் வசீகரமான தோற்றம் மக்களை எளிதில் கவர்ந்தார். 

 


பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் குந்தவை எனும் இளவரசியாக நடித்துள்ளார். பெயரை போலவே அவரது சேலையிலும் அவர் அணிந்துள்ள நகைகளிலும் பாரம்பரியம் உள்ளது. எந்த இளவரசி தான் நகைகளை வேண்டாம் என்பார். இப்படத்திற்காக திரிஷா கிருஷ்ணன் அழகான கிரீடத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்.   

Continues below advertisement