VidaaMuyarchi: விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா? படம் தொடங்கியும் அப்டேட் தராத படக்குழு.. ரசிகர்கள் அப்செட்!

பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து தற்போது நடிகை த்ரிஷா அஜர்பைஜானில் செனறுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

Continues below advertisement

விடாமுயற்சி

‘துணிவு’ படம் வெளியாகி ஓராண்டு காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்காமல் இருப்பது அஜித் ரசிகர்களை பொறுமையிழக்கச் செய்தது. முதலில் விக்னேஷ் சிவன் அஜித்குமாரை இயக்க இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தப் படம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடம், மீகாமன் ஆகிய படங்களை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியது.

Continues below advertisement

தொடர்ந்து அஜித் பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைத்துவிட்டு அஜித் ஒரு பக்கம் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்ல, படம் பற்றிய எந்தத் தகவலும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு வேலைகள் நிலுவையில் கிடந்தன. இப்படியான நிலையில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார் அஜித்குமார். இதற்கடுத்தாவது படம் பற்றி  அப்டேட் வரும் என்று காத்திருந்த ரசிகர்கள் தொடர்ச்சியான ஏமாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். 

யார் யார்  நடிக்க வாய்ப்பு இருக்கிறது?

இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு ஐக்கிய அமீரக நாடுகளில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்டவர்கள் அஜர்பைஜான் கிளம்பி சென்றதை அடுத்து அடுத்தடுத்த பிரபலங்கள் அஜர்பைஜானில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் ஐந்தாவது படமாக விடாமுயற்சி திரைப்படம் இருக்கும். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் தாஸ் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. 

பிரியா பவானி சங்கர்

இதனைத் தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜர்பைஜானில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது.

அஜர்பைஜானில் த்ரிஷா

பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து தற்போது நடிகை த்ரிஷா அஜர்பைஜானில் செனறுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதன் மூலம் விடாமுயற்சி படப்பிடிப்பில் த்ரிஷா இணைந்துள்ளதை ரசிகர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இருந்தும் படக்குழு சார்பில் எந்த விதமான அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை அஜித் ரசிகர்களுக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!

Continues below advertisement