சமீப காலமாகவே துபாய் அரசு குறிப்பிட்ட சில இந்தியன் நடிகர்களை குறிப்பாக இந்தியன் நடிகர்களை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. சமீபத்தில் மம்முட்டி , மோகன் லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்கள் இந்த விருதினை பெற்ற நிலையில் தற்போது த்ரிஷாவிற்கும் கோல்சன் விசா வங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழ் நடிகை ஒருவர் கோல்டன் விசா பெறுவது இதுவே முதல்முறை. இதன் மூலம் கலை , மற்றும் பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் துபாயில் நட்சத்திரங்களின் பங்களிப்பை வேண்டுகிறது துபாய் அரசு. கோல்டன் விசா அங்கீகாரத்தை பெற்றது குறித்து த்ரிஷா தனது சமூக வலைத்தள்ள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “ முதல் தமிழ் நடிகையாக கோல்டன் விசாவை பெற்றது மகிழ்ச்சியாகவும் , பெருமையாகவும் உள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.
கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசால் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், கலை, அறிவியல், விளையாட்டுத் துறையில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுகிறது. இந்த துறையில் திறமையானவர்கள் யாராக இருந்தாலும் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் என்னும் மெஹா பட்ஜெட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு முன்னதாகவே 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'ராங்கி' உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா அவை வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.மேலும் 'ராம்' என்னும் ஒரு மலையாள படத்தினை மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் புதிதாக வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகும் அந்த வெப் சீரிஸிற்கு பிருந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.