வெளியானது 'ட்ரிகர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் 'சுகுபி டூபா'... செப்டம்பர் ரிலீஸ்!
"Scooby Dooba..." : அதர்வா முரளி கதாநாயகனாக நடித்திருக்கும் "ட்ரிகர்" திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடல் "சுகுபி டூபா" என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Trigger First Single released today : "ட்ரிகர்" படத்தின் முதல் சிங்கள் "சுகுபி டூபா" பாடலின் லிரிகள் வீடியோ இஸ் அவுட்
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் "ட்ரிகர்". இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் "சுகுபி டூபா" என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Just In




பெரிய திரை பட்டாளம்:
ப்ரதீக் சரவர்த்தி தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் அருண் பாண்டியன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சீதா, கிருஷ்ணா, வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புதாசன் என ஒரு பெரிய திரைபட்டாளமே நடித்துள்ளது.

முதல் சிங்கள் வெளியானது :
இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடந்து இன்று படத்தின் முதல் லிரிகள் சிங்கள் "சுகுபி டூபா" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மிர்ச்சி விஜய் எழுதிய இப்பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். எடிட்டிங் பணிகளை ரூபன் மற்றும் சண்டை காட்சிகளை கவனித்துள்ளார் சுப்புராயன்.
செப்டம்பர் வெளியீடு :
அதர்வா முரளி - சாம் ஆண்டன் இருவரும் "100" படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். அதர்வா முரளி நடிப்பில் சமீபத்தில் தான் "குருதி ஆட்டம்" திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. அந்த வகையில் "ட்ரிகர்" செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். ஆனால் தேதி குறித்து இதுவரையில் அறிவிப்பு வெளியாகவில்லை. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.