Watch Video: பாரதிராஜா கவலைக்கிடம்? தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த ராதிகா!

பாரதிராஜா பூரண உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் நடிகை ராதிகா சரத்குமார் பிரார்த்தனை செய்துள்ளார். 

Continues below advertisement

பாரதிராஜா பூரண உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் நடிகை ராதிகா சரத்குமார் பிரார்த்தனை செய்துள்ளார். 

Continues below advertisement

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராதிகா சரத்குமார், “ பாரதிராஜா அவர்களே, நீங்கள் பூரண நலம் பெற்று திரும்ப, பிரான்சில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தேன். நான் திரும்பி வந்து உங்களை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். உங்களுடன் பேசுவதை தவறவிட்டு விட்டேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

பிரபல இயக்குநரான பாரதிராஜா கடந்த 23-08-2022 அன்று  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியானது. முன்னதாக இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து அவர் சிகிச்சைப் பெற்று வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர அறிவுறுத்தினர்.

அந்த அறிவுறுத்தலின் படி, இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாகவும், புதிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தனர். இதுஒருபுறம் இருக்க அவருக்கு பெரிதான பாதிப்பு ஏதும் இல்லை என்றும அவர் இன்னும் நான்கு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement