முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் கவர்னர் மாதிரி... முன்னாள் டிக்டாக் பிரபலம் என குறிப்பிட்டு, குறிப்பிட்டு நமக்கு வெறுப்பாய் தான் இருக்கிறது. ஆனால் வேற எவ்வாறு இவர்களை அடையாளப்படுத்துவது என்று தெரியவில்லை. சரி... கனத்த மனதோடு இன்னொரு முறை கூறிவிடலாம். முன்னாள் டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா, அடிக்கடி திடீர் கெட்டப்புகளில் இறங்குவார். அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையில் புதிதாக பூக்கடை வியாபார கோலம் பூண்டார். 




மதுரை மல்லி... திருச்சி மல்லியாக மாறியது. ‛பூக்கடைகாரரிடம் கொஞ்சம் நேரம் இரவல் பெற்று சாதனா செய்த விற்பனை, பஸ் ஸ்டாண்டில் சென்ற ஆண்கள் கூட்டம் அங்கு கூடி பூக்கள் வாங்க ... ஒரே திருவிழாவானது அந்த பகுதி. இதோ பூக்காரியாக திடீர் விஜயம் எடுத்த திருச்சி சாதனா... பூக்களை முழம் முழமாக விற்றதும், அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகளை இப்போது பார்க்கலாம்...


’மதுரை மல்லி... முல்லைப்பூ... கனகாம்பரம்... ஜாதிப்பூ... வாங்கிக்கோ... மதுரை மல்லி... மதுரை மல்லி... வாங்கண்ணே வாங்கண்ணே... ஒய்ப்பூக்கு வாங்கிட்டு போங்க...50 ரூபாய்க்கு வாங்கிட்டு போண்ணே... 50 ரூபாய்க்கு வாங்கிட்டு போய் பொண்டாட்டிக்கு கொடுங்க. ஒய்ப்பூ இருக்காங்கல்ல... போய் பாசமா கொடுண்ணே... வாப்பா.. மதுரை மல்லி... மதுரை மல்லி... வெறும் 5 ரூபாய்க்கு மதுரை மல்லி... மதுரை மல்லி... அரை மல்லிகப்பூ வாங்கிட்டு போய் ஜமாய்ங்க.. வாங்கம்மா வாங்கம்மா... வந்து பூ வாங்கிட்டுப்போம்மா...’ இது தான் சாதனாவின் விற்பனை மந்திரங்கள்.





அந்த பேருந்து நிலையத்தில் அத்தனை பூக்கடைகள் இருந்தும், சாதனாவின் உரத்த குரலும், வாடிக்கையாளர்ளை ஈர்த்த ஓலமும், பலரும் அந்த கடையை தேடி வந்து பூக்கள் வாங்கினர். அவருக்கு ஒரு வீடியோ கிடைத்தது. சம்மந்தப்பட்ட பூக்கடைக்கார அம்மாவுக்கு பூக்களும் விற்பனையானது. குறிப்பாக சதனாவில் சத்தத்திற்கு நிறைய ஆண்கள் வந்து பூக்கள் வாங்கினர். அவர் ஒரு ‛செலிபிரிட்டி’ (அப்படி தான் அவர்கள் நம்புகிறார்கள்) என்பதால் , எளிதில் அவரை அடியாளம் கண்டு அனைவரும் பூக்கள் வாங்கினர். இதனால் பல்வேறு அவதாரம் பூண்ட சாதனா... பூக்காரியாகவும் புது பொறுப்பை ஏற்றார். 


சாதனாவின் பூக்காரி வீடியோவை முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்!



 


மேலும் சாதனா தொடர்பான செய்திகளை படிக்க...


பனை கொட்டையை கடித்த சாதனா... கொந்தளித்த ரசிகர்கள்... விழிப்புணர்வு என விளக்கம்!


பாவாடையில் மீன் பிடித்த சாதனா.. குளியல் ஆடையுடன் சாலையில் வீடியோ பதிவு!


‛அபோகலிப்டா‛ அரபு வெர்சனில் திருச்சி சாதனா... ஆதாம்... ஏவாலாக காட்டுக்குள் வேட்டு!