தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நன்மைகள் இருந்தாலும், ஒரு பக்கம் கைதாகும் அளவுக்கு குற்ற நடவடிக்கைகளும் அதிகரிக்கிறது. திருச்சி சாதனா,திவ்யா, ஜி.பி முத்து என பலர் இந்த வரிசையில் உள்ளார்கள். டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து என்ன செய்வது என்று புலம்பிய நிலையில் ஒவ்வொரு டிக் டாக் பிரபலங்களும் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் அனைவருக்கும் மிகவும் தெரிந்த நபர்களில் ஒருவர் தான் திருச்சி சாதனா.


டிக்டாக் தொடக்கத்தில் கிராமப்பெண்களிடம் இவ்வளவு நடிப்புத்திறமை உள்ளதா? என அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தவர்தான் திருச்சி சாதனா.. இதோடு இவரது வீடியோவைப்பார்க்கும் ஒவ்வொருவரும் அக்கா உங்களுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது போன்ற பல கமென்ட்களையெல்லாம் தெறிக்க விட்டார்கள்.




இதன் விளைவு தான் தற்போது திருச்சி சாதனாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Sadhana media என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதற்கு 192 k சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனலில் அவர் செய்யும் அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில், திருச்சி சாதனா எதார்த்தமாக காட்டு பகுதிக்கு சென்றபோது, அங்கு அட்டை அட்டையாக கொட்டப்பட்டு இருந்த முட்டையை கண்டு அதிர்ச்சியடைகிறார். இங்குதான் நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. எவன்டா இவன் வேலை வெட்டி இல்லாம, இந்த முட்டையை இப்படி கொட்டி வச்சிருக்கான். இல்லேன்னா, திருச்சி சாதனாவே, வீடியோக்கு கன்டென்ட் கிடைக்கலேன்னு இவங்களே காசு கொடுத்து போஸும் கொடுக்குறாங்களோன்னு தோணுது..



எது எப்படியோ திருச்சி சாதனா எப்படி அதிர்ச்சியாகி வீடியோக்குள்ள வாக் போற மாதிரி, நம்மளும் வீடியோவ பார்க்க போவோம். திருச்சி சாதனா வாயில் இருந்து கொட்டிய முதல் வார்த்தை அடியாத்தி எவன்டா இவன் இத்தனை முட்டைய மூட்டை மூட்டையா கொட்டுனதுன்னு. அப்பதான் எங்களுக்கும் ஒன்னு தோனுச்சு நடு வெயில்ல, நடுகாட்டுக்குள்ள உனக்கு என்னமா வேலைன்னு. வெளிய போக உங்களுக்கு இதுதான் நேரமா.. இல்ல வந்த இடத்துல போகாம போரு அடிக்குதுன்னு இன்றோ கொடுத்து ஏன் எங்கள வேற இம்சை பண்றன்னு.. 


என்னமோ.. தொடர்ந்து வீடியோவ பார்த்தா ஒவ்வொரு முட்டையையும் ஒடச்சு பார்த்து, உருதெரியாம மஞ்சள் கருவை கலைச்சுட்டு இருக்காங்க. அடடே! இது நல்ல முட்டை, இது கெட்ட முட்டைன்னு சிதறிய முட்டைக்கு சீராக பேரு வச்சிட்டு இருக்காங்க.. இதுக்கு மேல பொறுமை இல்லாத சாதனா, வேதனை அடைந்து மல்லாக்க கிடந்த ஒரு பெரிய கல்ல அல்லேக்கா தூக்கி கூமுட்டை எல்லாத்தையும் கூல்லா உடைச்சு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.. இதோட அவங்க வீடியோவும் ஓவர். எங்க கன்டென்ட்டும் ஓவர்.. நெக்ஸ்ட் வீடியோவில் சந்திப்போம் டாட்டா... 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண