த்ரிஷா


தமிழ் சினிமாவில் கடந்த 21 ஆண்டுகளாக ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா (Trisha). மெளனம் பேசியதே படத்தில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் தொடங்கி பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை வரை அழகாலும் நடிப்பாலும் வசீகரித்து வருகிறார். தமிழ் சினிமா கடந்து, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ரசிகர்களை கைவசம் வைத்திருக்கிறார்.  தற்போது த்ரிஷா மலையாளத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அவரது புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.


மூன்றாவது முறையாக மலையாள சினிமா


முந்தையதாக நிவின் பாலியுடன் ஹே ஜூட் மற்றும் மோகன்லாலுடன் ராம் ஆகிய படங்களில் நடித்த த்ரிஷா தற்போது மூன்றாவது முறையாக மலையாள படத்தில் நடிக்கிறார். மலையாள நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் ஐடெண்டிடி (அடையாளம் ) என்கிற படத்தில் தற்போது த்ரிஷா நடித்து வருகிறார்.






அகில் பால் மற்றும் அனாஸ் கான் ஆகியவர்கள் இந்தப் படத்தை இயக்குகிறார்கள். மேலும் த்ரிஷா நடிக்கும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படபிடிப்புத் தளத்தில் இருந்து த்ரிஷா மற்றும் டொவினோ தாமஸ் ஆகிய இருவரின் புகைப்படங்கள் வீடியோ  வெளியாகியுள்ளன.