தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். வைதேகி பொறந்தாச்சு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பிரசாந்த், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், திருடா திருடா, ராசாமகன், ஆணழகன், கல்லூரி வாசல், ஜீன்ஸ், காதல் கவிதை, பூமகள் ஊர்வலம் ஜோடி, ஹலோ என்று ஏராளமான படங்களில் நடித்தார். 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்தவர். அஜித், விஜய் கூட ஹிட் கொடுக்க போராடிய போது, சினிமாவில் அசாலட்டாக அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் தான் பிரஷாந்த்.

Continues below advertisement

 இதுவரைக்கும் விஜய் - அஜித் கூட ஜோடி போடாத, ஐஸ்வர்யா ராய் முதல் சிம்ரன், ரம்பா, ரோஜா, சங்கவி, சுனேகா, மதூ, சிவரசஞ்சனி, ரியா சென், அப்படினு பல முன்னணி ஹீரோயின்ஸ் கூட ஜோடி போட்டு நடிச்சவர் தான் பிரசாந்த்.

Continues below advertisement

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்விய, சந்திச்ச இவர்... கிட்டத்தட்ட 5 வருஷம் பொன்னர் சங்கர் படத்துக்காக ஒதுக்குனாரு. இந்த படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் எந்த படத்துலயும் அவர் நடிக்காமல் இருந்தார். ஆனால் அவரின் காத்திருப்பையும், எதிர்பார்ப்பையும் இந்த படம் பூர்த்தி செய்ய தவறியது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதன் பின்னர், மம்மட்டியான், புலன் விசாரணை 2, சாகசம், ஜானி, அந்தகன், கோட் ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த 2 படங்களுமே ஹிட் கொடுத்தாலும் இப்போதைக்கு அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தான், அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு 7ஆவது பிளாக் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 51 வயதாகும் பிரசாந்த் 7ஆவது பிளாக் பெல்ட் வாங்கி அசத்தி இருக்கிறார். ஆற்காட்டில் ஜப்பான் ஹிட்டோ ராய் கராத்தே பள்ளியின் சார்பில் நடைபெற்ற 46ஆவது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே போட்டியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இந்த பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.