உணர்ச்சி என்பது இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும்  பொதுவானது. அப்படி இருக்கையில் சினிமாவில் மட்டும் உணர்ச்சிகள் இல்லாமல் படைக்க முடியுமா என்ன. உணர்ச்சி என்றாலே அம்மா தானே. அம்மா செண்டிமெண்ட் இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அம்மா கதாபாத்திரம் என்பது படங்களில் ஒரு துணை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டாலும் மிகவும் வலிமையான கதாபாத்திரங்களாகவே உருவாக்கப்பட்டுள்ளன.


அம்மா பாடல்கள் | Mother Sentiment Songs:


அம்மாவின் உன்னதத்தை போற்றுவதிலும், வலிமையடைய செய்ததிலும் சினிமா பெரும் பங்கு வகிக்கிறது. அன்றைய காலத்து சினிமா முதல் இன்றைய ட்ரெண்டிங் சினிமா வரை அம்மாவுக்கு பிறகு தான் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  அம்மாவின் அருமை பெருமைகளை அவரின் மீது இருக்கும் அன்பை ஒரு பாடலின் மூலம் வெளிப்படுத்திவிடலாம். அப்படி தமிழ் சினிமாவில் வெளியான அம்மா பாடல்களை டாப் 10 என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 


 



10 . மன்னன் (1992) :


ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பூ நடிப்பில் வெளியான மன்னன் படத்தில் யேசுதாஸ் குரலில் 'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே' பாடல் இன்றும் கேட்பவர்களை உருக வைக்கும் ஒரு பாடல். 


9 . பிச்சைக்காரன் (2016) :


விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் அவரே இசையமைத்து பாடிய 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா' என்ற பாடல் அம்மாவின் அருமையை உணர்த்திய பாடல்.


8 . நியூ (2004) :


எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் நடிப்பில் வெளியான நியூ படத்தில் உன்னி கிருஷ்ணன் - சாதனா சர்கம் குரலில் 'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா' என்ற பாடல் மூலம் ஒரு கருவற்று குழந்தையை சுமக்கும் தாயின் அன்பை வெளிப்படுத்திய பாடல்.



7 . கணம் (2022) :


சர்வானந்த், அமலா நடிப்பில் வெளியான 'கணம்' திரைப்படத்தில் சித் ஸ்ரீராம் குரலில் உருக வைக்கும் 'ஒருமுறை என்னை பார் அம்மா, கடவுளின் கண்கள் நீ அம்மா' பாடல் அம்மாவை தேடும் ஒரு பிள்ளையின் அன்பை வெளிப்படுத்திய பாடல்.


6 . வியாபாரி (2007) :


எஸ்.ஜே. சூர்யா, தமன்னா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் ஹரிஹரன், வைஷாலி பாடிய 'ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்' பாடல் விலைமதிப்பற்ற அம்மாவை பற்றிய பாடல். 


 



5 . ராம் (2005) :


ஜீவா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான 'ராம்' படத்தில் கே.ஜே. யேசுதாஸ் குரலில் 'ஆராரிராரோ... நான் இங்கே பாட' பாடல் அன்னைக்கு மகன் பாடும் தாலாட்டு. 


4 . எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி (2004) :


ஜெயம் ரவி, அசின், நதியா நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி படத்தில் கே.கே குரலில் 'நீயே நீயே நானே நீ' பாடல் சிங்கிள் மாம்களின் அன்பை அழகாக வெளிப்படுத்திய பாடல்.


3. முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012) :


ஆதர்வா முரளி, அமலா பால் நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் 'ஜி.வி. பிரகாஷ், சித்தாரா கிருஷ்ணகுமார் குரலில் உருக்கமான 'கண்கள் நீயே காற்றும் நீயே' பாடல் மகனை கொஞ்சும் தாயின் பாசம் வெளிப்படும்.


2 . வேலையில்லா பட்டதாரி (2014) :


தனுஷ், அமலா பால், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ், எஸ். ஜானகி குரலில் 'அம்மா அம்மா நீ எங்க அம்மா... உன்னை விட்ட எனக்கு யாரு அம்மா' பாடலில் தாயை பறிகொடுத்த மகனின் ஏக்கத்தை வெளிப்படுத்திய பாடல். 


1. வலிமை (2022) :


அஜித் குமார், சுமித்ரா நடிப்பில் வெளியான வலிமை படத்தில் சித் ஸ்ரீராம் குரலில் 'அம்மா என் முகவரி நீ அம்மா' பாடல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் முகவரியை இருக்கும் அன்னையின் பெருமையை உணர்த்தும் பாடல். 


இப்படி தமிழ் சினிமாவில் அம்மாவின் அன்பை, உன்னதத்தை வெளிப்படுத்திய ஏராளமான பாடல்கள் வெளியாகியுள்ளன. 


உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 


ALSO READ | Mothers Day 2023: "செல்லமே என கொஞ்சிட அன்னை அன்றி யாருண்டு..?" அகிலம் போற்றும் அன்னையர் தினம்..!