இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபரான முகேஷ் அம்பானியின்  மனைவி நீடா முகேஷ் அம்பானி இந்தியாவில் பல்துறை கலாச்சார மையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இங்கு நமது நாட்டின் மிக சிறந்த கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள், இசை, நாடகம் உள்ளிட்டவை காட்சிப்படுத்த பட்டுள்ளன. இந்த மையத்திற்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி இலவசம். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழா மார்ச் 31ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. 


 



மும்பை வந்த ஸ்பைடர் மேன் கப்பிள்ஸ்:


இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த கலாச்சார மைய திறப்பு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்களான ஸ்பைடர் மேன் புகழ் டாம் ஹாலண்ட் மற்றும் ஜென்டாயா இருவரும் கலந்து கொண்டனர். அவர்களை இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நீடா அம்பானி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் விமானம் மூலம் நேற்று மும்பை வந்தடைந்தனர் ஹாலண்ட் மற்றும் ஜென்டாயா.


கலினா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹாலிவுட் பிரபலங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் புகைப்படங்களையும் வீடியோவையும் எடுத்து தள்ளினார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. மும்பைக்கு அவர்கள் இருவரும் வந்திறங்கியது இதுவே முதல் முறையாகும்.  ஹாலிவுட் பிரபலங்கள் ஹாலண்ட் மற்றும் ஜென்டாயா இருவரும் ஒன்றாக இணைந்து 'ஸ்பைடர் மேன் :ஹோம் கமிங்' மற்றும் 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' படத்திலும் நடித்திருந்தனர். இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 


PS2 பணிகளில் பிஸியாக இருக்கும் இசைப்புயல் :


பல பிரபலங்கள் கலந்து கொண்ட  நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது என ட்வீட் செய்துள்ளார் இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது மிகவும் பிஸியாக பொன்னியின் செல்வன் 2 , அயலான், மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் அடுத்ததாக மணிரத்னத்தின்  இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றுக்கும் இசையமைக்க உள்ளார். 



ஏ.ஆர். ரஹ்மான் மிஸ் பண்ண என்ன காரணம் :


சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்படம் ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட படக்குழு மிகவும் மும்மரமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பிஸியாக அப்படத்தின் ஸ்கோரிங் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அவரால் நீடா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போனது என தனது வருத்தத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார் இசைப்புயல்.