Tom Cruise Flying: இங்கிலாந்து மன்னரை வாழ்த்த விமானத்தை தலைகீழாக ஓட்டிய டாம் க்ரூஸ்..! 60 வயதிலும் அடங்காத ஆக்‌ஷன்..!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வாழ்த்த டாம் க்ரூஸ் செய்த விமான சாகசம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Continues below advertisement

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வாழ்த்த டாம் க்ரூஸ் செய்த விமான சாகசம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் விமானத்தை தலைகீழாக ஓட்டி அசத்தியுள்ளார்.

Continues below advertisement

டாம் க்ரூஸ்:

ஹாலிவுட் திரைப்படங்கள் குறிப்பாக ஆக்‌ஷன் திரைப்படங்களை விரும்பி பார்க்கும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒரு நடிகர் தான் டாம் க்ரூஸ். வயது 60 ஆனாலும், இன்றளவும் தனது படத்தில் இடம்பெறும் பல ஆபத்தான சண்டை காட்சிகளை கூட டூப் ஏதுமின்றி தாமாகவே செய்து வருகிறார். கட்டடங்கள் மீது தாவுவது, விமானத்தை பிடித்து தொங்குவது என அவர் செய்யும் பல சாகசங்கள் காண்போரை திகைப்பில் ஆழ்த்தும். இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திய மிஷன் இம்பாசிபில் படத்தின் அடுத்த பாகத்திற்காக விமானத்தில் இருந்து குதிப்பது மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடுவது போன்ற டாம் க்ரூஸின் வீடியோ காட்சி பலரையும் வாயடைக்கச் செய்தது.

மன்னர் பதவியேற்பு விழா:

இந்த சூழலில் தான் இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அண்மையில் பொறுப்பேற்றார். யுனைடெட் கிங்டம் எனப்படும் இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள 14 காமன்வெல்த் நாடுகளின் மன்னராக, கடந்த 70 ஆண்டுகளில் ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதன்முறையாகும். அதன்படி, இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்ற மூன்றாம் சார்லஸ் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த பட்டியலில் டாம் க்ரூஸும் இணைந்து, வெளியிட்டுள்ள சாகச வீடியோ ஒன்று பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

டாம் க்ரூஸ் வாழ்த்து:

இதுதொடர்பான வீடியோவில், P51 மஸ்டங்க் விமானத்தை ஓட்டியவாறு வரும் டாம் க்ரூஸ். அதில் அமர்ந்தவாறே, எங்கள் மன்னரே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடைய விங்மேனாக வரலாம் என, மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து, தனது விமானத்தை தலைகீழாக சுழற்றி மீண்டும் மேலே வந்து சாகசம் செய்தவாறு அசத்தியுள்ளார். மன்னர் சார்லஸும் விமானம் ஓட்டுவதில் கைதேர்ந்தவர் என்பதால், அவரை சக விமான ஓட்டியாக வருமாறு டாம் க்ரூஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அரச குடும்ப விழாவில் டாம் க்ரூஸ்:

முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு டயானாவின் இறுதிச்சடங்கில் விருந்தினராக பங்கேற்ற டாம் க்ரூஸ், அதைதொடர்ந்து தற்போது சார்லஸின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார். சாகசங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டாம் குருஸ், விமானம் ஓட்டுவதற்கான உரிமைத்தையும் பெற்றுள்ளார்.  இவரது நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் இம்பாசிபில் படத்தின் அடுத்த பாகம், வரும் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola