டாம் க்ரூஸ் நடித்திருக்கும் மிஷன் இம்பாசிபள் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தனது படங்களில் இடம்பெறும்   ஆபத்துகள் நிறைந்த ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடிப்பது டாம் குருஸின் ஹாபி என்றே சொல்லலாம். விமானத்தில் தொத்திக்கொண்டு போவது, மலையிலிருந்து பைக் ஓட்டிக்கொண்டே குதிப்பது என தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய சாதனையை செய்து வருகிறார் டாம் க்ரூஸ். இது எல்லாம் இருந்தாலும் டாம் க்ரூஸ் அதிவேகமாக பாய்ச்சல் எடுத்து ஓடுவதை ரசிப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.


 நான் பிறக்கும்போதே ஓடிக்கொண்டேதான் பிறந்தேன்


மிஷன் இம்பாசிபள் திரைப்படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் டாம் க்ரூஸ் நீண்ட தூரம் ஓடும் ஒரு காட்சியாவது இடம்பெற்றிருக்கும். எந்த வித கிராஃபிகஸ் காட்சிகளும் இல்லாமல் தனது உடல் பலத்தால் மட்டுமே ஓடும் டாம் க்ரூஸின் ஓட்டத்திற்கு அவரது ரசிகர்கள் அடிமை. இது குறித்து டாம் க்ரூஸிடம் கேட்கப்பட்டபோது அவரது பதில் என்னவாக இருந்தது தெரியுமா “ நான் பிறக்கும்போதே ஓடிக்கொண்டுதான் பிறந்தேன். என் அம்மா வயிற்றில் இருந்து வெளியே வந்த நான் ஒடிக்கொண்டே இருந்திருக்கிறேன் . என்னை பிடித்து வைக்க அவர் மிகவும் சிரமப்பட்டார்” என்று கூறியிருக்கிறார் டாம்.


வாழ்நாள் முழுவதும் தொடரும் ஓட்டம்






தான் நடித்த மொத்தம் 52 படங்களில் 44 படங்களில் ஓடும் காட்சிகளில் நடித்திருக்கிறார் டாம் க்ரூஸ். கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு 27 கிலோ மீட்டர்கள் ஓடக்கூடியவராம் டாம் க்ரூஸ். டாம் க்ரூஸ் எவ்வளவு வேகமாக ஓடக்கூடியவர் என்கிற சந்தேக வந்த அவரது ரசிகர் ஒருவர் இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் அதிவேகமாக ஓடக்கூடிய நான்கு நடிகர்களின் காட்சிகளை பல நாட்கள் பார்த்து அவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வந்தார். டாம் ஹாங்க்ஸ், சில்வஸ்டர் ஸ்டாலோன், மார்கச் ஹெண்டர்ஸன் மற்றும் கலூயா மற்றும் டாம் க்ரூஸ்  இந்த ஐந்து நபர்களில் முதலிடத்தைப் பிடித்தார் டாம் க்ரூஸ். திரைப்படங்களில் அதிவேகமாக ஓடக்கூடிய நடிகர்களின் முதல் இடத்தில் இருக்கிறார் டாம் க்ரூஸ்.


மிஷன் இம்பாசிபள் -7


 நாளை வெளியாக இருக்கும் மிஷன் இம்பாசிபள் திரைப்படத்தின் ஏழாம் பாகத்தில் ரசிகர்கள் கண்டு ரசிப்பதற்கு நிச்சயம் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. இதில் பலருக்கு மிகப்பிடித்த காட்சியாக 61 வயதில் டாம் க்ரூஸ் ஓடும் காட்சியாக இருக்கலாம்.