Watch Video: ப்ரோமோஷனுக்காக இப்படியெல்லாமா? பேட்டியில் நடிகை காலை முத்தமிட்ட இயக்குநர்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை பார்த்தவர்கள், அந்த முழு நீள பேட்டியை பார்த்து அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Continues below advertisement

தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட சினிமாவின் இயக்குநரான ராம் கோபால் வர்மா, சமீபத்தில் ஆபாசமான் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தமிழில், நடிகர் சூர்யாவின் ‘ரத்த சரித்திரம்’ படத்தை இயக்கிய இவர், ரங்கீலா, சத்யா, கம்பெனி, காயம், அமிதாப் பச்சன் நடித்த ‘சர்கார்’  உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது பாணியை மாற்றிய இவர், கிளைமேக்ஸ், நேக்கட்,  உள்ளிட்ட ஆபாச படங்களை எடுத்து சர்ச்சையை கிளப்பினார்.

இவரின் இயக்கில் அடுத்ததாக தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள டேஞ்சரஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

டேஞ்சரஸ் படத்தின் கதைகரு :

ஒருபாலின ஈர்ப்பாளர்கள் இருவரும், அவர்களது திருமண வாழ்க்கைக்கு பிறகு, சமூதாயத்தில் கடந்து வரும்  பிரச்னைகளை பற்றி பேசும் படமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. தற்போது, இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக, இயக்குநர் ராம் கோபால் வர்மா, பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகையாகிய, ஆஷு ரெட்டியின் பேட்டியில் கலந்து கொண்டார். 

பிரோமோஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ராம் கோபால் வர்மா, அந்த பேட்டியை, ப்ரோமோட் செய்யும் விதமாக ராம் கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ ஆஷூ ரெட்டியின் டேஞ்சரஸான மார்க் எங்கே.. என குறிப்பிட்டு, அதில் ஆஷூ ரெட்டியின் காலை பிடிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த ட்வீட் சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அந்த பேட்டியின் முழு வீடியோவையும் அவர் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். அப்படி அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? 

ராம் கோபால் வர்மா செய்த காரியம் :

பேட்டி எடுக்கும் நடிகை சோபாவில் அமர்ந்துகொள்ள, இவர் தரையில் அமர்ந்தார். பின், அந்த நடிகையின் பாதத்தை தொட்ட அவர், அதில் முத்தமிட்டார். அத்துடன் முடித்துக்கொள்ளாமல் சில அறுவறுக்கத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். 

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் :

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர், ராம் கோபால் வர்மாவை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒரு படத்தை ப்ரோமோட் செய்வதற்காக, இந்த அளவிற்கு கீழ் தரமாக ஒருவர் செல்ல முடியுமா.. பார்ககவே சகிக்கவில்லை.. ஆபாசமாக உள்ளது என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

ராம் கோபால் வர்மாவும் அவரது சர்ச்சையான ட்வீட்களும் :

படங்கள் இயக்குவதை தவிர்த்து, சர்ச்சை மிகுந்த ட்வீட்களை பதிவிட்டு பேசுபொருளாக மாறியவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஷ்ரத்தா வாக்கரின் படுகொலை குறித்து, “ இவரின் ஆத்மா சாந்தி அடைவதை விட, இவர் மீண்டும் உயிர்பித்து வந்து , அந்த பையனை 70 துண்டுகளாக வெட்ட வேண்டும்” என பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் கண்டத்தை பெற்றது. 

 

Continues below advertisement