மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் பார்த்தேன் மீண்டும் தமிழ் சினிமாவின் முக்கியமான படத்தை தந்துள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் இன்று அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பசுபதி, லால் , ரஜிஷா விஜயன் , அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கைத் தழுவி உருவாகி ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக பைசன் உருவாகியுள்ளது.  பைசன் படத்தின் சிறப்பு திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு நல்ல  விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

துணை முதல்வர் பதிவு:

இந்த நிலையில் பைசன் திரைப்படத்தை பார்த்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள பதிவில் பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.

Continues below advertisement

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் - காளமாடன் வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் முழு வீச்சில் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவரது கடைசி படமான மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.