Jon Landau: உலகின் முதல் 100 கோடி வசூல் படத்தை தயாரித்தவர்.. டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மறைவு!

Jon Landau: கடந்த 16 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜான் லாண்டவ் நேற்று (ஜூலை.06) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஹாலிவுட்டில் பெரும் பட்ஜெட்டில் உருவாகி, வசூலில் பட்டையைக் கிளப்பி, உலகையே திரும்பிப் பார்க்க டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் (Jon Landau) நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 63.

Continues below advertisement

ஜேம்ஸ் கேமரூன் கனவை நனவாக்கியவர்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான எலி லாண்டாவின் மகனான இவர், 1980களில் தன் தந்தை வழியில் படத்தயாரிப்பில் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனின் கனவும், கதையும் உயிரூட்டம் பெற காரணகர்த்தாவான ஜான் லாண்டாவ், டைட்டானிக் படத்துக்காக ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 16 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜான் லாண்டாவ் நேற்று (ஜூலை.06) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் ஒரு பில்லியன் அதாவது ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்த முதல் படமான டைட்டானிக் மற்றும் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டு வெளியாகி 2.3 பில்லியன்களுக்கு மேல் குவித்த ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ மற்றும் அதன் முதல் பாகம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு மற்றும் வசூலில் தயாரிப்பாளராக இவரது பங்கு முக்கியமானது.

 

இவை தவிர அவதார் படத்தின் வரவிருக்கும் அடுத்தடுத்த பாகங்களிலும் இவர் பெரும் பங்காற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஜான் லாண்டாவின் மறைவுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், டைட்டானிக் பட நடிகை கேத் வின்ஸ்லெட் உள்ளிட்ட ஹாலிவுட் திரையுலகினர் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola