தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார். ஆனால் அவரது வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர் தில் ராஜு விமர்சித்துள்ளார்.


வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. அதேபோல், போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த இரண்டு மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்களும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. பல  வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.


 



 


குட்டையை குழப்பும் தில் ராஜு :
 
இந்த சமயத்தில் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில்  விஜய் தான் நொ. 1 ஸ்டார், ஆனால் அவரது வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என விமர்சனம் செய்தது அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில் "தெலுங்கு தயாரிப்பாளர் எந்த அர்த்தத்தில் இப்படி விமர்சித்துள்ளார் என்பது தெரியவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு தெரியாத யார் ஸ்டார் நொ. 1 என்று. எந்த அர்த்தத்தில் எதன் அடிப்படையில் இப்படி அவர் பேசியுள்ளார் என்பது புரியவில்லை. ஏனென்றால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது ஆனால் இதுவரையில் ஒரு திரையரங்கை கூட கன்ஃபார்ம் செய்யவில்லை. என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒரு யூகத்தில் இப்படி பேசுவது சரியல்ல" என்றார். 






எங்களுக்கு தெரியாதா யார் நம்பர்.1 என்று ?


மேலும் அவர் கூறுகையில் " திரைப்பட உரிமையாளர்களை பொறுத்த வரையில் இந்த ஹீரோ அந்த ஹீரோ என எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. எங்களை பொறுத்தவரையில் அஜித், விஜய் என அனைவருமே ஒன்று தான். விநியோகஸ்தர்கள் புக்கிங் செய்தல் மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்ய முடியும். சினிமாவை பொறுத்த வரையில் படத்தின் திரைக்கதைக்கு தான் முக்கியத்துவம். படத்தின் கதை நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்கம் வருவார்கள். ஹீரோக்களுக்கு தான் முக்கியத்துவம் என்றால் பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி வசூலில் சாதனை படைத்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் படமானது. அப்படி பார்த்தால் கமல் தான் நொ. 1 நடிகர் என சொல்லலாமே. திரைக்கதை நன்றாக இருந்தால் அந்த படம் தான் நொ. 1. அப்படி பார்த்தால் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. எனவே ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு விஜய் நொ. 1 நடிகர் எனவே எங்களுக்கு தான் அதிகமான திரையரங்கம் கொடுக்க வேண்டும் என சொல்வதில் நியாயமில்லை". 


தேவையில்லாமல் வம்பிழுக்கிறார் :
 
"சினிமா தொழில் என்பது கணிக்க முடியாத ஒரு தொழில். விஜய்யை வைத்து படம் எடுத்து விட்ட ஒரே காரணத்தால் இது போல தேவையில்லாமல் பேசி சர்ச்சையை உருவாக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் அரசியல், சினிமா என தனித்தனியே எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக செய்து கொண்டு இருக்கும் போது தில் ராஜு இப்படி விமர்சிப்பது வம்புக்கு இழுப்பது போல இருக்கிறது" என மிகவும் கடுமையாக பேசியிருந்தார் திருப்பூர் சுப்ரமணியம்.