‛தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே...’ என, நயன்தாராவை பார்த்து விஜய்சேதுபதி டூயட் பாடியிருந்தாலும், ஒரிஜினல் டூயட்டிற்கு சொந்தக்காரர் விக்னேஷ் சிவன் தான். நயன்தாராவிற்கு சில காதல் அனுபவம் இருந்திருந்தாலும், அவர் அன்பை பெற்றவர், விக்கி என்று அழைக்கப்படும் விக்னேஷ் சிவன் தான். நீண்ட... ஆண்டுகள் காதல் உறவாடிய நயன்-சிவன் ஜோடி, பலருக்கு வயிற்றெரிச்சலை தந்தது. உண்மையில், 90 ஸ் கிட்ஸ், ரொம்பவே பொறாமை பட்டதும், நயன்-சிவன் ஜோடியைப் பார்த்து தான். 




ஒருவழியாக காதலை முடித்து, கல்யாணத்திற்குள் ஊழைய முடிவு செய்தது நயன் ஜோடி. நயன்தாராவும் சரி, விக்னேஷ் சிவனும் சரி, இருவருமே திருப்பதி வெங்கடாஜலபதியை விரும்பி வணங்குபவர்கள் . அடிக்கடி அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்பவர்கள். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு கூட, திருமலை சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு தான், திருமண அறிவிப்பு கூட வெளியானது. அந்த அளவிற்கு அவர்களுக்கு அங்கு சென்டிமெண்ட் உண்டு. 


தங்கள் திருமணத்தை திருப்பதி சன்னதியில் நடத்த தான், நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திட்டமிட்டது. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இருவரும் செய்து வந்தனர். ஆனால், திருப்பதி தேவஸ்தானம் அதை மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு சில காரணங்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் அவர்களின் உறவினர்கள் 150 பேர் பங்கேற்ப்பார்கள் என்று இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 150 பேரை வைத்து திருமணம் செய்வது, திருப்பதில் சாத்தியமில்லாத விசயம் என்பதால் அதற்கு தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துவிட்டதாம். 


தற்போது கோடை விடுமுறையில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 150 பேருக்கு மேல் அனுமதிப்பது என்பது, நடக்காத காரியம் என தேவஸ்தானம் தரப்பில் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்களாம். இதனால் வேறு வழியின்றி திருமணத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நயன்-சிவன் ஜோடி தள்ளப்பட்டது. 






உறவினர்களும் வர வேண்டும்; அதே நேரத்தில் பிரசித்தி பெற்ற இடமாகவும் இருக்க வேண்டும் என முடிவு செய்த அவர்கள், இறுதியில் மகாபலிபுரத்தை தேர்வு செய்துள்ளனர். மகாபலிபுரம், நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த இடமாம். அங்குள்ள கடற்கரை பகுதிகளை அவர் மிகவும் விரும்புவாராம். எனவே, அந்த இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து, அதற்காக நட்சத்திர விடுதி ஒன்றை தேர்வு செய்துள்ளனர். திருமணத்தை குறிப்பிட்ட சிலரோடு நடத்திவிட்டு, சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நடத்தவும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் முடிவு செய்துள்ளார். திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்க வாய்ப்புள்ளது. வரவேற்பில், பிரபலங்கள் பலரையும் அழைக்க காதல் ஜோடி முடிவு செய்துள்ளது.