திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசித்து வருபவர் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி. இவர் சமீபத்தில் மதுரையில் மற்றொரு டிக்டாக் பிரபலமான சிக்கந்தர் என்பவரை சாலையில் வைத்து செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் மணப்பாறைக்கு வந்தும் விசாரணை நடத்திச் சென்றனர்.இதற்கிடையில் கடந்த ஆக,25 அன்று சூர்யா தேவி, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னுடைய பிள்ளைகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி ஒரு வீடியோ அனுப்பினார்.
உடனே திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் பிருந்தா தலைமையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போலீசார், காந்தி நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை தட்டிப்பார்த்து, காலிங் பெல் அடித்துப் பார்த்தும் திறக்காத நிலையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே உடனே மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அறையில் சூர்யா தேவி அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்திச் சென்றனர். அச்சம்பவத்திற்கு பின் சூர்யா தேவி, சமூக வலைதளத்தில் வருவதை தவிர்த்து வந்தார். ஆனாலும் அவரது ரசிகர்கள், அவரை விடாமல் மீம்ஸ் போட்டு வெறுப்பேற்றி வந்தனர். குடிபோதையில் மட்டையாகி சூர்யா வீட்டில் தூங்கியதாகவும், குறட்டை விட்டு மட்டையானதாகவும் தகவல்களை பரப்பினர். இதைத் தொடர்ந்து சூர்யா தேவி ஒரு வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
நான் கொஞ்ச நாள் இந்த பக்கம் வர மாட்டேன். ஒருத்தி சாவில் கூட மொக்கை பண்ணனும் நினைக்கிறாங்க. வழக்குக்கு பயந்து நான் தற்கொலை செய்ய போகவில்லை. குடித்து விட்டு நான் தூங்கவில்லை. அப்படி குடித்திருந்தால், அன்று வீட்டிற்கு வந்த போலீசாருக்கு தெரிந்திருக்கும். என் மீதுதவறு இருந்தால் நான் ஏன் கமிஷனர் ஆபிசுக்கு வீடியோ அனுப்ப வேண்டும். எனக்குனு ஒரு மனசு இருக்கு. வெளியே நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். நீங்க பேசுறதெல்லாம் பரவாயில்லை... கூட இருந்தவன்... வாழ்ந்தவன் பேசினால்...! இன்னைக்கு ஒரு நாள் லைவ் பண்ணுவேன். இனி என் குடும்பம், என் பிரச்சினைனு தான் இருக்கப் போறேன். என் வீட்டை உடைத்து பெட்ரூம் வரை வந்து விட்டார்கள். என் வீட்டு உரிமையாளர் பாவம். இதுவரை அவங்க என்னிடம் எதுவுமே கேட்டதில்லை. அவ்வளவு வருத்தப்பட்டாங்க.
என்னுடைய வலியும் வேதனையும் எனக்குத் தான் தெரியும். பெரிய முட்டாள் தனம் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இனி என் குழந்தை, என் வாழ்க்கை என வாழப்போகிறேன். இனி இங்கு(யூடியூப்) வரமாட்டேன். கோயில் மாதிரி இருந்த என் வீட்டில் போலீசார் ஷூ கால்களுடன் வந்துவிட்டார்கள். அதை பார்த்ததிலிருந்து எனக்கு மனசு சரியில்லை. ஆனால் இவை அனைத்துக்கும் நான் தான் காரணம். போலீஸ் வரும் போது நான் ஒன்றும் தூங்கவில்லை. அவர்கள் வந்து விட்டார்கள் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அந்த விவகாரத்தை வைத்து என்னை வெச்சு செஞ்சுட்டீங்க. யாருக்கும் பயந்து நான் தற்கொலை செய்ய முன்வரவில்லை. இனி ஒதுங்கியிருக்க போகிறேன், என, சூர்யா தேவி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Flashback: யானை கேட்ட ரவிக்குமார்... குதிரை தந்த செளத்ரி... காஸ்ட்லி கவுண்டமணி... இது நாட்டாமை கதை!