பிக்பாஸ் சீசன் 5ல் ஜி.பி.முத்து? விஜய் டிவி போட்ட பதிவு... தொற்றிய பரபரப்பு!

பொதுவாக தன்னுடைய புதிய திட்டங்களை சூசகமாக முன்கூட்டியே அறிவிப்பதை விஜய் டிவி எப்போதும் செய்யும். அந்த வகையில் தற்போது விஜய் டிவி போட்டுள்ள பதிவு, வைரலாகியுள்ளது.

Continues below advertisement

நிகழ்ச்சியால் சிலர் பிரபலமாவது ஒன்று. பிரபலமானவர்களை வைத்து நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவது மற்றொன்று. இதில் பிக்பாஸ் எந்த ரகம் என்கிற குழப்பம், முதல் சீசனில் இருந்தே இருந்து வருகிறது. தமிழ்நாட்டை கடந்து உலகளாவிய அளவில் பிரபலமானவர்கள், பிரபலமாக பேசப்படுபவர்கள், சர்சைக்குரியவர்கள் என தேடி தேடி பங்கேற்பாளர்களை அழைத்து வந்ததும் தான், தமிழ் பிக்பாஸின் வெற்றி. பிற மொழிகளில் வெளியானாலும், தமிழில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்குவதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வேறொரு முகம் கிடைத்தது. 

Continues below advertisement

இத்தோடு நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. ஐந்தாவது சீசனுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. நிகழ்ச்சி வருவதற்கு முன்பே இந்த சீசனில் யார் யார்  பங்கேற்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு பிக்பாஸ் எதிர்பார்ப்பு மக்களிடம் பரவிக்கிடக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், இவர் இவர் தான் வருவார் ஒவ்வொருவராக பங்கேற்பாளர்கள் குறித்து ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. பொதுவாக தன்னுடைய புதிய திட்டங்களை சூசகமாக முன்கூட்டியே அறிவிப்பதை விஜய் டிவி எப்போதும் செய்யும். அந்த வகையில் தற்போது விஜய் டிவி போட்டுள்ள பதிவு, வைரலாகியுள்ளது. ‛வணக்கம் நண்பர்களே...’ என்று மட்டும் தான் அந்த பதிவில் உள்ளது. 

தமிழ்நாட்டிலேயே.... இல்லை இல்லை... உலகத்திலேயே ‛வணக்கம் நண்பர்களே...’ என ஆரம்பிப்பது, முன்னாள் டிக்டாக் பிரபலம், இந்நாள் சினிமா நடிகர் ஜி.பி.முத்து தான். விஜய் டிவியின் இந்த சூசக அறிவிப்பை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து பங்கேற்பதற்கான அறிவிப்பு என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். 

சமூகவலைதளத்தின் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. அவரின் செத்தப்பயலே நாரப்பயலே... வசனங்கள் பலரால் கொண்டாடப்படுகிறது. ஜி.பி.முத்து பதிவுகளுக்கு பல கோடி பேர் காத்திருக்கிறார்கள். எனவே ஜி.பி.முத்து பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க வாய்ப்பு என்பதை உறுதி செய்யும் விதமாகத்தான் இந்த பதிவு போடப்பட்டதாக ஜி.பி.முத்து ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

வணக்கம் நண்பர்களே என்பது ஜி.பி.முத்துவின் அக்மார்க் வசனம் தான் என்றாலும், அது பிக்பாஸ் தொடர்பான அறிவிப்பு தானா, அல்லது ஜி.பி.முத்துவை வைத்து ஏதாவது நிகழ்ச்சியை விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளதா, அல்லது தற்போது நடந்து வரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து கூடுதலாக பங்கேற்க போகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பதிவுக்கு பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர். சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola