கடந்த வாரம் சொல்லியிருந்தோம்...டிக்டாக் மாஜி பிரபலங்களின் உலகம் வினோதமானது. அவர்கள் எப்போது சண்டை போடுவார்கள்... எப்போது சேர்வார்கள்... எப்போது கட்டி உருளுவார்கள் என்பது அவர்களே வெளிச்சம். ரவுடிபேபி சூர்யாவின் மனம் கவர்பவராக இருந்த சிக்கா, அதன் பின் ஏனோ அவரிடம் பிரிந்து தனியாக வந்தார். அப்புறம் புலம்பிக் கொண்டிருந்தார். என்ன சண்டை... ஏன் சண்டை என.... ஊருக்கும் தெரியாது... அவர்களுக்கும் தெரியாது. இதற்கிடையில் திடீரென எண்ட்ரி ஆன சூர்யா தேவி, சிக்காவை செருப்பால் அடித்து துவைக்க, சிக்கா-சூர்யாதேவி மோதல் விஸ்வரூபம் எடுத்தது. 


கடந்த 2 வாரங்களாக பொதுதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த அக்கப்போர்... ஒரு கட்டத்தில் போலீஸ் புகார் வரை சென்றது. தன்னை செருப்பால் அடித்த சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரதம் இருந்த சிக்கா, கடந்த சனிக்கிழமை வரை அதற்கு கெடு கொடுத்து, பின்னர் அது நிறைவேறாததால் அதை கண்டித்து ஞாயிறு கிழமை அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் தன் மீசையை எடுத்தார் சிக்கா. சரி, இனி சிக்கா என்ன ஆவார். ரவுடி பேபி சூர்யாவும் போயாச்சு... வெச்ச மீசையும் போயாச்சு... பாவம் மனுஷன் என்ன பண்ணுவாரோ என புலம்பிக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு ஷாக்...


 


திடீரென ரவுடிபேபி சூர்யா உடன் மீண்டும் இணைந்தார் சிக்கா. மீசை எடுத்த சல்மான் கான் என அவரே  கூறிக்கொண்டு இளமை திரும்பிய பேட்ட ரஜினியாக நேரலையில் துள்ளிக் கொண்டிருந்ததை கண்டு மீண்டும் கவர்ந்த ரவுடி பேபி சூர்யா, சிக்கா உடன் இணைந்ததாக கூறப்படுகிறது. உடனே சிக்காவுக்கு அழைப்பு விடுத்தார் ரவுடி பேபி. மேலூர் பாகற்காய் உடன் திருப்பூருக்கு புறப்பட்ட சிக்கா, அதை ரவுடிபேபிக்கு பரிசளித்து ஒன்றிணைந்தார். அது என்ன காம்பினேஷனோ... கொண்டு வந்த பாகற்காயை சமைத்து, இருவரும் ஜோடி சகிதமாய் நேரலையில் தோன்றினர்... 




சிக்காவின் தோற்றத்தை கண்டு, நீங்க ரெண்டு பேரும் படத்தில் நடித்தால் என்ன என்று பலர் கேள்வி கேட்க, ‛எங்களுக்கு நிறைய ஸ்டோரி வருது... நாங்க தான் நல்ல ஸ்டோரிக்காக காத்திருக்கிறோம்,’ என பதிலளித்தார் ரவுடிபேபி. ‛கடலைப்பருப்பு வாங்கவே துப்பு இல்ல.. இதுல எதுக்கு உனக்கு பாதம் பருப்பு,’ என, சிக்காவை பார்த்து ஒருவர் கேட்க, சிரித்தபடி கடந்தது ஜோடி. முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என அவர்களுக்கு கேள்வி எழுப்பினர். ‛‛அரசியல் மாற்றத்தை பார்த்திருக்கிறேன். ஸ்டாலின் வந்த பின் நாடு முன்னேறியிருக்கு. ஆபாசமா நடிக்கிற எங்களைப்போன்றோர் பயப்படுகிறார்கள்.நான் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டேன். சைலேந்திரபாபு அவர்கள் வந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சி...’’ என பதிலளித்தார் ரவுடிபேபி. உங்கள் அருகில் இருப்பது சிக்கா மாதிரி இருக்கிறதே என ஒருவர் கேட்க, ‛சிக்கா செத்து போயிட்டார்... அவர் ஜீனை எடுத்து இவரை உருவாக்கியிருக்கிறோம்’ என சைன்டிஸ் பதில்களும் அளித்தார் ரவுடி பேடி சூர்யா. இப்படி இன்னும் பல இம்சை கேள்விகளும், துவம்ச பதில்களுமாய் கடந்தது அந்த நேரலை. 


மீண்டும் ரவுடி பேபி-சிக்கா இணைந்திருப்பது, சூர்யா தேவிக்கு பதிலடி தரத்தான் என்கிறார்கள் அவர்களின் ஆதரவாளர்கள். 


 


இதோ அந்த ஜோடி பறவைகளின் நேரலை வீடியோ...