கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் திஷா பதானி இன்று தனது 31 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மிக அழகான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் அவரது முன்னாள் காதலன் என கிசுகிசுக்கப் படும் டைகர் ஷ்ராஃப்

Continues below advertisement

தோனியின் சுயசரிதையான dhoni the untold story திரைப்படத்தில் அறிமுகமானவர் திஷா பதானி. அந்த படத்தின் வழியாக பாலிவுட், கோலிவுட் எல்லா தரப்பு ரசிகர்களில் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தைத் தொடர்ந்து பாகி 2, மலங், என பல வெற்றிப் படங்களில் நடித்த திஷா பதானி பாலிவுட்டில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டிங் ஆகும் ஒரு பக்கங்களில் திஷா பதானியின் ட்விட்டர் , இன்ஸ்டா ஸ்வாரஸ்யம் இல்லாமல் இருக்காது.

திஷா பதானி தனது ஃபிட்னஸுக்காக பெயர் போனவர். அதுமட்டுமில்லாமல் இவரின் வருகைக்குப் பின் பாலிவுட்டின் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு கிளாமரில் சவால் விடக்கூடியவராக திகழ்ந்து வருகிறார். சிறிது காலம் திஷா பதானியும் புகழ்பெற்ற நடிகரான நடிகர் டைகர் ஷ்ராஃப் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென்று இவர்கள் இருவரும் தங்கள் உறவை முடித்துக் கொண்டார்கள். இதற்கான தெளிவான காரணம் எதுவும் இருவரும் சொல்லவில்லை.

Continues below advertisement

இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் திஷா பதானிக்கு அவரது முன்னால் காதலர் என்று அறியப்படும் நடிகர் டைகர் ஷ்ராஃப் அழகான வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

”எதிர்வரும்  காலங்கள் எல்லாம் மகிழ்ச்சிகரமானதாக மட்டுமே இருக்கும் எனவும் இதேபோல் தனது சிறகை விரித்து அனைவர் மத்தியிலும் தனது மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பகிர்ந்தவாறே இருக்குமாறு” தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார் டைகர் ஷ்ராஃப்.

தற்போது திஷா பதானி யோத்தா என்கிற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோயினாக வெளிப்படுவார் என தகவல் வெளியாகியிருந்தது.  அந்த படத்திற்காக திஷா பதானி மிகத் தீவிரமாக சண்டைப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அண்மையில் திஷா தனது பயிற்சியாளருடன் சண்டைபோடும் ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் அவர் ஜம்ப் கிக், ஸ்பின் கிக் என காற்றில் சுழன்றடித்து சண்டைபோடும் காட்சிகள் பார்வையாளர்களை வாய்பிளக்கச் செய்திருக்கிறது. இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் அவரை பாராட்டியதுடன் பலர் சற்று கிண்டலாக அவரது முன்னாள் காதலரான டைகர் ஸ்ராஃபுடன் இணைத்து பேசினார்கள். டைகர் ஷ்றாஃப் மிக அசாத்தியமான ஸ்டண்ட் செய்யக் கூடியவர் என்பது நமக்குத் தெரியும். இந்த வீடியோ வெளியானதை அடுத்து ரசிகர் ஒருவர் “யார் அந்த டைகர் ஷ்ராஃப்” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் “ நான் கூட டைகர் ஷ்ராப்னு நினைச்சுட்டேன்” என ஜாலியாக சொல்லியிருக்கிறார்.

இந்த வீடியோ வெளியானதில் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதலான சந்தோஷம் என்னவென்றால் திஷா பதானி  இயக்குனர் சிவா இயக்கி சூர்யா நடிக்கு வரலாற்றுத் திரைப்படமான கங்குவா படத்தில் நடித்துவருகிறார். அதனால் இந்த ஸ்டண்ட் காட்சிகள் எல்லாவற்றையும் சூர்யாவின் படத்தில் பார்க்க அதிக வாய்ப்புள்ளது. ரசிகர்களே காத்திருங்கள்.