Ajith Fan Thunivu Set: 'சார்-னு கூப்பிடாத அண்ணன்னு கூப்பிடு..' அஜித் சொன்ன அந்த வார்த்தை..! ஊழியர் நெகிழ்ச்சி..

தன் அருகில் நின்ற ஒருவரை சார் என்று கூப்பிடவேண்டாம், அதற்கு பதிலாக அண்ணன் என்று கூப்பிடுங்கள் என்று அஜித் சொன்னதாக, துணிவு படத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தன் அருகில் நின்ற ஒருவரை சார் என்று கூப்பிட வேண்டாம், அதற்கு பதிலாக அண்ணன் என்று கூப்பிடுங்கள் என்று அஜித் சொன்னதாக, துணிவு படத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

Continues below advertisement

அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச். வினோத். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும், மக்களின் மனங்களில் பதியும் அளவிற்கு அவர் கதைகளை எடுத்திருக்கிறார். அஜித்தை வைத்து இவர் தற்போது இயக்கி இருக்கும் படம் துணிவு. இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் இந்த வருட பொங்களுக்கு மோத காத்து இருக்கிறது.

 

விஜய்-அஜித்தின் படங்கள்,  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாவதால், சினிமா ரசிகர்கள் “என்ன நடக்க காத்திருக்கோ..” என ஆவலுடன் உள்ளனர். துணிவு படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகளும், பாடல் உருவாக்கம் சம்பந்தமான பணிகள் நடந்து வருகிறது. துணிவு படம் ஆரம்பித்தது முதலே அஜித் சம்பந்தமான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், அண்மையில் அவர் டப்பிங் பேசும் போட்டோவும் வைரலானது. இந்த நிலையில் துணிவு படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ஊழியர் ஒருவரின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

 

துணிவு படத்தின் பாடல் உருவாக்கம் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்துள்ளது. அப்போது படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசிகர், "துணிவு ஷூட்டிங்.. ராப் பாடல் படப்பிடிப்பின் போது தல செட் உள்ள வந்து வந்து போயிட்டு இருந்தாரு. நானும் ஒரு நாலு பேர் பசங்க ஓரமா நின்னு பேசிட்டு இருந்தோம்.

அப்போ அந்தப்பக்கம் தல வந்தாரு. அவர் எங்கள பாத்து, "ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ஒர்க் பண்ணி டயர்டு ஆகி இருப்பீங்க உட்காருங்க" ன்னு தோள்ப்பட்டை மேல் கை வைச்சு சொல்லிட்டு போனாரு. கடைசியாக என் பக்கத்தில் நின்ற ஒரு பையன், பரவாயில்லை சார்ன்னு சொல்ல.. தல என்ன தெரியுமா சொன்னாரு?.. "சார்னு சொல்லாதடா அண்ணான்னு சொல்லுடான்னு சொல்லிட்டு சிரிச்சிட்டு போனாரு” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola