Thunivu Release Date: நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் அறிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் மாஸ் ஓபனிங் கொண்ட நடிகர் அஜித். அவருக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இடையிடையில் பைக்கில் ரைய்டு செல்வது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக இருக்கிறது. ஆனால் அவர் எப்போதி படங்களில் நடித்தாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பு எதற்கும் ஈடு இணையற்றது.
ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் மூன்றாவது திரைப்படமான AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வலிமை திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் மிகவும் மும்மரமாக நடந்தது.
அப்டேட்
இந்த நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதாகவும் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருப்பதாகவும் தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நாயகியாக பிரபல மலையாள திரையிலகின் முன்னனி நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நட்சத்திரப்பட்டாளம்
அண்மையில் இந்தப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி மற்றும் சிபி சக்ரவர்த்தி இணைந்திருப்பதை அவர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உறுதி செய்தது.
படத்தின் ரிலீஸ் தேதி
படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில், தற்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் “தல பொங்கல் லாக்ட் 12-01-2023” என குறிப்பிட்டுள்ளார்.