துணிவு படத்தில் நடிகர் அஜித்திற்கு டூப் போட்டவரின் போட்டோவும் சில தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.


பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளை பார்பதற்கே, தனிக்கூட்டம் ஒன்று தியேட்டருக்கு கிளம்பி போகும். தமிழ் சினிமாவில் பறந்து பறந்து வில்லன்களை ஹீரோக்கள் பிச்சி எடுக்கும் சீன்களுக்கு சில்லறையை சிதரவிடும் ரசிகர்கள் ஏராளம். இப்படிப்பட்ட சூப்பரான காட்சிகளுக்கு அஸ்திவாரமாக இருப்பவர்கள், டூப் ஆர்டிஸ்ட்டுகள்தான். திரைப்படத்தில் ஹீரோத்தனம் காட்டும் நாயகர்களை விட, தங்கள் உயிரினை பணயம் வைத்து ஸ்டண்ட் செய்யும் டூப்களே ரியல் ஹீரோஸ். 



நடிகர் அஜித்தும் சண்டை காட்சிகளும் 






மற்ற ஹீரோக்கள் டூப் போட்டு நடித்து வர, நடிகர் அஜித் சண்டை காட்சிகளில் அவரே ஆஜராகி மாஸ் காட்டி வந்தார். இவருக்கு பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஆர்வமும் அனுபவமும் இருப்பதால், இயக்குநர்களிடம் கேட்டு கேட்டு பைக் ஸ்டண்டுகளை செய்தவர் அஜித். இதனால் உடல் நல பாதிப்பு போன்ற பல பின்விளைவுகளையும் சந்தித்தார் அஜித். தற்போது, வெளியாகவுள்ள துணிவு படத்தின் 70 சதவித ஸ்டண்ட் காட்சிகளை டூப் ஆர்டிஸ்ட் ஒருவர் நடித்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.






சுதாகர் என்ற டூப் ஆர்டிஸ்ட், அவரது இன்ஸ்டா பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், அவர் நடித்த ஸ்டண்ட் காட்சியையும் ஷேர் செய்துள்ளார். சுதாகர், அஜித் போல் நீளமான தாடியில் காட்சியளிக்கிறார். இந்த ஸ்டண்ட் காட்சிகள், சென்னை மவுண்ட் ரோடில் எடுக்கப்பட்டவை ஆகும். பொது இடத்தில் அஜித் நடித்தால் கூட்டம் சேர்ந்து விடும் என்ற காரணத்தினால், இந்த காட்சிகளை டூப் வைத்து எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுதாருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாது என்ற கசப்பான உண்மைதான்.


சுதாகர் போன்ற பல டூப் ஆர்டிஸ்ட்டுகள் தங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காமல் நடித்து வருகின்றனர் என்பது கஷ்டமான விஷயம் ஆகும். இதை திரையுலகினர் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.