Vijay 66 Update: விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். யோகி பாபு, செல்வராகவன் என பலர் நடித்துவரும் இந்த படத்தின் அப்டேட்கள் விஜய் பிறந்தாநாள் அன்று வந்தது. இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த செய்திகள் வரும் முன்பே தளபதி 66(Thalapathy 66) திரைப்படத்தின் அப்டேட்டுகள் வர தொடங்கிவிட்டன. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி விஜய்யின் தளபதி 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டரான வம்சி பைடிபள்ளி இயக்க போவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க போவதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டிலுடன், படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கான தேடல் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷயும், தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவையும், இந்தியில் முன்னணி நடிகையாக கியாரா அத்வானியையும் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே சர்கார், பைரவா திரைப்படத்தில் விஜயோடு நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா மாஸ்டர் திரைப்படத்தில் ஏறக்குறைய நடித்திருக்க வேண்டியது. கியாரா அத்வானி தற்போது தான் செர்ஷா திரைப்படத்தின் வெற்றியை முடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ராம் சரனை ஷங்கர் இயக்கும் RC15 திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மூவரில் ஒருவர் தளபதி 66 ல் கதாநாயகியாக நடிப்பார்கள் என்று உறுதியாகியுள்ளது. ஆனால் இரு மொழிகளில் தயாராக போகும் இந்த படத்தின் கதாநாயகி, யார் அந்த ஒருவர் என்ற கேள்விக்கு பொறுத்திருந்து தான் பதில் காண வேண்டும்.



விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் கொடுத்த அருள் என்று கூறிய வம்சி இந்த படத்தின் கதையை மகேஷ்பாபு விற்காக உருவாக்கியதாகவும், அந்த கதையை கேட்ட அவர், தன்னைவிட இது விஜய்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடக்கும்போது மகேஷ்பாபுவும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடித்த தோழா திரைப்படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்திருந்தார். வம்சி இறுதியாக மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹேக்டே நடிப்பில் வெளியான மகாரிஷ் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.