டிக்டாக் முன்னாள் பிரபலம் திருச்சி சாதனாவுக்கு அடிக்கடி கடிதங்கள் வருவதும், அதை அவர் படித்துக் காட்டி வியூஸ் வாங்குவதும் நாம் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த முறை மதுரையிலிருந்து அவருக்கு வித்தியாசமான கடிதம் வந்தது. அனுப்பியது, ‛ஆண்கள் பாதுகாப்பு ஆபாச சங்கம்’ என்கிற பெயரில் மதுரையிலிருந்து வந்துள்ளது.
வழக்கமான மதுரை குசும்போடு, அடைமொழி பேரோடு, ஆபாச மிரட்டலோடு அனுப்பட்டுள்ள அந்த கடிதத்தை, தன் சிஷ்ய பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு, வரி வரியாக படித்துக் காட்டினார் சாதனா. வரிக்கு வரிக்கு சாதனாவை சல்லி சல்லியாக நொருக்கி எடுத்திருந்தாலும், அதை சிரித்த முகத்தோடு படித்து பரவசப்பட்டுக் கொண்டார், சாதனா.
சாதனாவின் சிரிப்பு, சாதனாவின் செயல் என அனைத்தையும் குறிப்பிட்டு அவர்களின் மிரட்டல் வரிகள் இருந்தன. ஒருகட்டத்தில் அந்த கடிதத்தை படிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு சாதனா வரும் போது, அவரது சிஷ்ய பிள்ளைகள், ‛அக்கா... படிங்கக்கா... கஷ்டப்பட்ட எழுதி அனுப்பியிருக்காங்க...’ என கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தனர். ‛ஏன் மேல இவ்வளவு கொலை காண்டா...’ என வரிகளின் வலிகளை வெளிப்படுத்திய சாதனா, அதற்கும் சிரிப்பாலேயே பதிலளித்தார்.
‛பத்திரமா இருந்துக்கோ... அவளிடம் சிக்கிவிடாதே...’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை கண்டதும், ‛யார் அந்த அவள்...’ என குழம்பிப் போனார் சாதனா. இறுதியாக கடிதம் அனுப்பிய சங்க உறுப்பினர்கள் பெயரை வாசித்தார். அத்தனையும் ஆபாச அடைமொழி பெயர்.
இதே கடிதம் வேறு யாருக்காவது வந்திருந்தால், இந்நேரம் போலீஸ் ஸ்டேஷனில் புகாராக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அதையும் பொருத்துக் கொண்டு , மகிழ்ச்சியாக இணையத்தில் பதிவிட்டு, மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சாதனா. இதெல்லாம் என்ன மாதிரி ஸ்டாட்டர்ஜியோ... ஆனால், நல்ல ஸ்டாட்டர்ஜி தான் என புகழ்கிறது ஒரு தரப்பினர். மற்றொரு தரப்போ, கடிதத்தின் வீரியம் தெரியாமல் சாதனா, அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என எச்சரிக்கையும் விடுக்கிறார்கள்.
டிக்டாக் பிரபலங்கள் ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ள நிலையில், சமீபத்தில் அவர்கள் இல்லாத குறையை திருச்சி சாதனா பூர்த்தி செய்து வருகிறார் என மற்றொரு கும்பல் , சாதனாவை பின் தொடர ஆரம்பித்துள்ளது.
இதோ அந்த வீடியோ...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்