விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல்னா சொல்லவே தேவையில்லை. தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,டிஆர்பிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
நீண்ட நாட்களாக இந்த சீரியல் முடிவுபெறும் நிலைமைக்கு சென்று, அதில் ஏதாவது ஒரு ட்விஸ்டை கிளப்பி மீண்டும் கண்ணம்மாவின்குழந்தைக்கு அப்பா யாரு என்ற கேள்விக்கு வந்துவிடுகிறது. ஒரே ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தா எல்லா கேள்விக்கும் பதில் வந்துரும் என்று நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊத்தி கமெண்ட் செய்தாலும், இதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த சீரியலின் இயக்குநர் நாளுக்குநாள் ட்விஸ்ட்களை அடுக்கி கொண்டு செல்கிறார்.
முன்னதாக, சீரியலில் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.
இறுதியில் கண்ணம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் ஒரு குழந்தை மட்டும் தான் கண்ணம்மாவிடம் வளர்வதுப்போன்றும், மற்றொரு குழந்தை மாமியார் சௌந்தர்யாவிடம் வளர்கிறது. ஒருநாள் இதனைத் தெரிந்துகொண்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். எப்பொழுதாவது ஒரு நாள் தன்னை பாரதி ஏற்றுக்கொள்வார் என்ற மனநிலையில் இருந்த கண்ணம்மா, இதனால் பல முறை அசிங்கப்படுகிறார்.
என்றாவது ஒருநாள் தான் சுத்தமானவள் என்று எண்ணி பாரதி தன்னை ஏற்றுகொள்வார் என்று கண்ணம்மா காத்திருக்கிறார். தொடர்ந்து, இவர்களுக்குள் முட்டலும், மோதலும், காதலும் பொங்கி வழிய கதையும் மெல்ல வேகமெடுக்க தொடங்குகிறது.
இந்தநிலையில், விஜய் டிவி இந்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பல சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. டாக்டர் பாரதி காரில் சென்று கொண்டிருந்தபோது, ஏதோ காரணங்களால் கார் நின்று விடுகிறது. என்ன என்று தெரியாமல் பாரதி தவித்துபோய், காரின் எஞ்சின் கதவை திறந்து பார்க்கிறார். அப்பொழுது, எதிர்பாராதவிதமாக அங்கு ஒரு திருடன் வந்து, மெல்ல காரின் முன்பக்கத்தின் கதவை திறந்து பாரதியின் செல் மற்றும் பர்சை திருடி ஓட முயற்சிக்கிறார்.
அந்த நேரத்தில் சொல்லிவைத்ததுபோல் கண்ணம்மா சரியாக அங்கு வர, திருடன் திருடுவதை பார்த்து விடுகிறார். ஏய் என்று கத்திக்கொண்டு கண்ணமா அதை தடுக்க ஓடி வருகிறார். மேலும், தான் வாங்கிவந்த காய்கறி பையில் இருந்த தேங்காயை எடுத்து திருடனை நோக்கி வீசுகிறார். அது சரியாக திருடனின் தலையை பதம்பார்க்க கீழே விழுகிறான். இதனால் கோவமடைந்த திருடன் கத்தியை எடுத்து கண்ணம்மாவை நோக்கி பாய்கிறார்.
கண்ணமாவின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கு பாரதி, திருடனை எட்டிஉதைத்து ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து, திருடனின் வெறி அதிகரிக்க பாரதியை நோக்கி கத்தி செல்கிறது. பாரதி உயிர் முக்கியமா கண்ணமாவின் உயிர் முக்கியமா என்று யோசிக்கும் நேரத்தில், கல் என்றாலும் கணவன் உயிரே முக்கியம் என்று பாரதி விழுக இருந்த கத்தி குத்தை கண்ணமா ஏற்று கொள்கிறார். அப்பாடா நல்லவேளையாக கத்தி கண்ணமாவின் வயிற்றில் பாயாமல், கையில் பாய்ந்தது.
இதைபார்த்து, துடித்துப்போன பாரதி கண்ணமாவை கையில் ஏந்தி, ஓட்டத்தில் உசேன் போல்டை முந்தி, மருத்துவமனைக்கு செல்கிறார். வெண்பா இதைபார்த்து வெறியாக, பாரதியின் மனமோ மனம் மாற, ரசிகர்களுக்கு கண்களில் தண்ணீர் ஊற இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்