ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவல் இதோ உங்களுக்காக:


 



 


#1 மிரள் :


ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி பேனர் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எம். சக்திவேல் இயக்கத்தில் மிரள வைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் 'மிரள்'. நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், காவ்யா அறிவுமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது சக்தி பிலிம் பேக்டரி.






#2 யசோதா :


ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'யசோதா'. வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.


 






 


#3 டிரைவர் ஜமுனா :


18 ரீல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. க்ரைம் த்ரில்லர் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கேப் டிரைவராக நடித்துள்ளார். பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


#4 பரோல் :


ட்ரிப்ர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், துவாரக் ராஜா இயக்கத்தில், ஆர். எஸ். கார்த்திக் மற்றும் லிங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் மோனிஷா, கல்பிகா, வினோதினி, டி.கே.எஸ், ஜானகி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு கிரைம், ஆக்ஷன், திரில்லர் கலந்த திரைப்படம்.  


இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாகும் இந்த நான்கு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.