தியேட்டர்ல படம் பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா? கவலையை விடுங்க... இருக்கவே இருக்கு ஓடிடி பிளாட்பார்ம். நீங்க மிஸ் பண்ண புது படங்களை ஜாலியா வீட்டில் இருந்தே பார்த்து என்ஜாய் பண்ணிக்கலாம். அப்படி இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க...
லால் சலாம் :
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும், இந்து மற்றும் முஸ்லீம் இடையிலான நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வரும் மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
லவ்வர் :
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பிரபுராம் வியாஸ் இயக்கி இருந்தார். ஹீரோவாக மணிகண்டன் நடித்த இப்படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. வரும் மார்ச் 8ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
ஹனுமான்:
ஹனுமான் சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் உள்ளிட்டோரின் நடிப்பில் தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. மார்ச் 8ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மெரி கிறிஸ்துமஸ் :
விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் ஒரு நாள் இரவில் நடைபெறும் கதையை மையமாக வைத்து வெளியான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியானது. மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மகாராணி 3 :
1990 களில் பீகாரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் சார்ந்த கதைக்களத்தில் வெளியாகும் இந்த வெப் சீரிஸில், ஹூமா குரேஷி, சோஹும் ஷா, அமித் சீல், கனி குஸ்ருதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மார்ச் 7ம் தேதி சோனி லைவில் ஒளிபரப்பாக உள்ளது.
உன்வேஷிப்பின் கண்டேதும் :
கிரைம் திரில்லர் ஜானரில் டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இப்படம் வரும் மார்ச் 8ம் தேதி மலையாள மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.