ஒவ்வொரு வாரமும் திரையரங்குக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் அநீதி முதல் இந்தி காலா வரை ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட் பட்டியலை இங்கு காணலாம். 



ஓடிடி தளங்கள் வந்த பிறகு ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த புதிய திரைப்படங்களை பல முறை பார்த்து ரசிக்க முடிகிறது. திரையரங்கில் தவறிய படங்களையும் கூட வீட்டில் அமர்ந்த படியே பார்க்க வசதியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் நீங்கள் என்ன படங்களை பார்க்கலாம் என்பதை பார்க்கலாம். 


அநீதி : தமிழ் 


இதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவராத ஒரு புதுமையான திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வசந்த பாலன். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களிலும் காலி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்த அநீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட அநீதி செப்டம்பர் 15ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 


கோபிசந்த் ராமபாணம் :  தெலுங்கு 


ஸ்ரீனிவாஸ் ராமபாணம் இயக்கத்தில்  ஜெகபதி பாபு, குஷ்பூ, தருண் அரோரா, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள "கோபிசந்த் ராமபாணம்" செப்டம்பர் 14ம் தேதி முதல் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த ஒரு பேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படமான இப்படத்தில் கோபிசந்த் ஹீரோவாகவும், டிம்பிள் ஹயாதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். 



போலா சங்கர் : தெலுங்கு 


தமிழில் அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீ மேக் படம் தான் போலா சங்கர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சிரஞ்சீவி ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்த இப்படம் தற்போது ஓடிடி வெளியாக தயாராகி விட்டது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம். 



7:11 PM : தெலுங்கு 


சைது மதலா இயக்கத்தில் சாஹஸ் பகடலா மற்றும் தீபிகா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 7:11 PM திரைப்படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி இருந்தது. டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. 


18Plus : மலையாளம்


அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நஸ்லென் கே. கஃபூர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஜர்னி ஆஃப் லவ் 18+. கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த மலையாள படம் நகைச்சுவை கலந்த காதல் ஜானரில் உருவாகியுள்ளது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் செப்டம்பர் 15ம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. 


காலா : இந்தி


பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அவினாஷ் திவாரி, தாஹேர் ஷபீர், ரோஹன் வினோத் மெஹ்ரா, ஹிட்டன் தேஜ்வானி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் காலா. இதை வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.  


இந்த வீக் எண்ட் முழுவதும் உங்களை உற்சாகப்படுத்த ஓடிடியில் வெளியாகவும் படங்களை கண்டுகளித்து என்ஜாய் செய்யுங்கள்.